அமெரிக்காவின் SPELLING BEE போட்டியில் சாம்பியன் – தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சிறுமி சாதனை

அமெரிக்காவில் நடத்தப்பட்ட SPELLING BEE போட்டியில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஹரிணி என்ற சிறுமி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சிறுமி ஹரிணி லோகன் அமெரிக்காவில் Spelling Bee போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆங்கில வார்த்தைக்கான எழுத்துக்களை பிழையின்றி விரைவாக கூறுவதே Spelling Bee போட்டி. இப்போட்டியில் வென்றதன் மூலம் அமெரிக்க அதிபரின் மனைவி, துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் ஹரிணி.

வெற்றிக்கான ரகசியம் குறித்து பேசிய ஹரிணி,“சிறுவயது முதலே புத்தகங்கள் அதிகம் படிப்பேன். 2015 ஆம் ஆண்டு இப்போட்டியில் ஒருவரது வெற்றியை பார்த்தபின் எனக்கும் அப்பட்டத்தை வெல்ல ஆர்வம் வந்தது. மனப்பாடம் செய்வதைவிட புரிந்து படித்தால் எளிதாக வெற்றிபெறலாம். வார நாட்களில் 4-6 மணி நேரம் பயிற்சி செய்வேன். வார இறுதி நாட்களில் 8-10 மணி நேரம் பயிற்சி செய்வேன். கடின உழைப்பு, சமயோசிதம், அர்ப்பணிப்பு, ஆர்வம் இருக்கவேண்டும் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்” என்று கூறினார்.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.