அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 22 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 02 காசுகளாக நிறைவடைந்தது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு, அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கியிருப்பது உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த வியாழன் அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகளும், வெள்ளியன்று 45 காசுகளும் உயர்ந்த நிலையில் நேற்று மேலும் 22 காசுகள் உயர்ந்துள்ளது.