அல்சர் முற்றிலும் குணமாக வேண்டுமா? இதோ சில வீட்டு வைத்தியம் உங்களுக்காக


இன்றைக்கு பலரும் அல்சர் நோயால் அவதியுற்று வருகிறார்கள்.

அல்சர் நோய் வருவதற்கு முதல் காரணம் காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்ற காரணங்களால் இந்த அல்சர் பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த அல்சர் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக நம் பாட்டி வைத்தியம் சிறந்து விளங்குகிறது.

அந்தவகையில் தற்போது அல்சரை குணமாக்க கூடிய சில வீட்டு வைத்தியங்களை இங்கே பார்ப்போம்.

அல்சர் முற்றிலும் குணமாக வேண்டுமா? இதோ சில  வீட்டு வைத்தியம் உங்களுக்காக | Do You Want The Ulcer To Heal Completely

  • வாரத்தில் மூன்று முறையாவது இந்த மணத்தக்காளி கீரையை சூப்பாகவோ அல்லது பொறியலாகவோ உட்கொண்டு வந்தால் குடல் புண், வயிற்று புண், அல்சர் மற்றும் வாய்புண் போன்றவற்றை சரி செய்யும்.
  • ச்சை வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வர, வயிற்று குடல்களில் பழுதுபட்ட மெல்லிய ஜவ்வு தோள்களை வளர செய்யும், இதனால் அல்சர் நோயை  சரி செய்ய உதவுகிறது.
  • தேங்காய் பாலை உணவில் சேர்த்து கொள்ளலாம் அல்லது தேங்காய் பாலை மட்டும் அருந்தி வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் உதவுகிறது.
  •  வீட்டில் இருந்து தயார் செய்த ஆப்பிள் ஜூஸை தினமும் அருந்தி வந்தால், அல்சரினால் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.  
  • பழுத்த பாகற்காயை தினமும் சமைத்து உண்டு வர, வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்வதுடன், குடலுக்கு வலிமை அளிக்கிறது. மேலும் பித்தத்தையும் தணிக்கிறது.
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வேப்பிலையை சாப்பிட்டு வர, அல்சரை சரி செய்வதுடன், வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.
  • தண்டு கீரையில் இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளதால், இவற்றை தினமும் உணவில் சேர்த்து வர உடலானது குளிர்ச்சி அடைந்து மூல நோய் மற்றும் குடல் புண் சரியாகிறது.
  •  தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும். அகத்திக்கீரையை சூப் செய்து கூட குடிக்கலாம்.
  • தினமும் புழுங்கல் அரிசி கஞ்சி ஒரு டம்ளர் அருந்தி வர, அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும்.
  • துளசி இலை சாறுடன் சிறிதளவு மாசிக்காயை சேர்த்து வாரத்தில் இரண்டு முறை அருந்தி வர, குடல் புண், வாய் புண் போன்றவை சரியாகும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.