சென்னை : ஜூலை 30ம் தேதி வழங்கப்பட்ட ஒரே ஒரு பால் பாக்கெட் எடையின் அளவு மட்டுமே குறைவாக இருந்துள்ளது. அதுவும் உடனடியாக வாடிக்கையாளர்க்கு மாற்றி வழங்கப்பட்டது என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆவின் பால் பாக்கெட்டை பொறுத்தவரை, அதன் அளவை, கிராமில் கணக்கிடும்போது, 500 மி.லி., என்பது, 517 கிராம் இருக்க வேண்டும். ஆனால், ஜூலை 30 ம் தேதி சென்னைக்கு விற்பனைக்கு வந்த பால் பாக்கெட்டுகள் 430 கிராம் மட்டுமே இருந்ததாக குற்றச்சாட்டு பதிவானது.
இது குறித்து ஆவின் நிர்வாகம் அளித்த விளக்கம் : கடந்த ஜூலை 30ம் தேதி வழங்கப்பட்ட ஒரே ஒரு பால் பாக்கெட் எடையின் அளவு மட்டுமே குறைவாக இருந்துள்ளது. அதுவும் உடனடியாக வாடிக்கையாளர்க்கு மாற்றி வழங்கப்பட்டது. நுகர்வோரின் நலம் பேணும் வகையில் தரத்துடன் கூடிய பால்விநியோகம் செய்யப்படும். இயந்திர தொழில்நுட்பம் காரணமாக ஏதேனும் அளவு குறை இருப்பின் உடனடியாக நுகர்வோர்களுக்கு , அதற்குரிய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்று பால் பாக்கெட்டுகள் வழங்கப்படும். நுகர்வோருக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் 24 மணி சேவை கட்டணமில்லா எண்ணான 1800-425-3300 அல்லது [email protected]ல் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement