பெங்களூரு : கர்நாடகா மின் பரிமாற்ற நிறுவனம், பெங்களூரில் ஆகஸ்ட் முழுதும் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. இதனால் பெஸ்காம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படவுள்ளது.பெஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகா மின் பரிமாற்ற நிறுவனம், பெங்களூரில் ஆகஸ்ட் மாதம் முழுதும் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது.
ஒயிட் பீல்டு மண்டலத்தில், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை 57 மணி நேரம் பல பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இங்கு மின் தடை ஏற்படாத வகையில், மாற்று ஏற்பாடுகளை, பெஸ்காம் செய்து வருகிறது.கனகபுரா, ராம்நகர், மத்துார், எச்.எஸ்.ஆர்., சந்தாபுராவின் பல பகுதிகள், மாகடியின் பல பகுதிகள், நெலமங்களா, கெங்கேரி, ஹொஸ்கோட், நந்தகுடி,தேவனஹள்ளி, ஆவலஹள்ளி, சிந்தாமணி,
சிக்கபல்லாபூர், கே.ஜி.எப்., கோலார், விதான் சவுதாவின் டபிள்யூ 3, 4, 5, ஆர்.ஆர்.நகர் பிரிவு, ஜெயநகரின் பல பிரிவுகள், துணை பிரிவுகள், ராஜாஜி நகர், எச்.எஸ்.ஆர்., லே – அவுட், கோரமங்களா, இந்திரா நகர்,ஒயிட்பீல்டு பிரிவு, சிவாஜி நகர் பிரிவு, ஹெப்பால் பிரிவு, எலஹங்கா நியூ டவுன், மல்லேஸ்வரம், ஜாலஹள்ளி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளின் சிறிது நேரம் மின் தடை ஏற்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement