பா.ஜ.,வின் பார்லிமென்ட் குழு கூட்டம் புதுடில்லியில் இன்று நடந்தது. இது குறித்து பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சருமான
பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:இன்று காலை 8:30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து பார்லிமென்ட் நோக்கி, எம்.பி.,க்களின் ‘பைக்’ பேரணி நடத்தப்படும். இதை, மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம் நடத்துகிறது; கட்சியின் சார்பில் நடக்கவில்லை. அதனால் அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் பங்கேற்க வேண்டும்.
கட்சியின் சார்பில் 75வது சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. வரும் 9 – 15ம் தேதி வரை இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும்,
காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை, வீடு தோறும் தேசியக் கொடியை ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் கட்சியினர் ஈடுபடுவர்.வரும் 11 – 13 வரை, கட்சியினர் ‘பைக்’ பேரணியை நடத்துவர். அப்போது, மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த ‘ரகுபதி ராகவ ராஜாராம்…’ என்ற பாடலை அல்லது ‘வந்தே மாதரம்…’ என்ற தேசியப் பாடலை பாடுவர்.
இதைத் தவிர, 14ம் தேதி பிரிவினையின் கொடூர நினைவு நாள் நிகழ்ச்சியும் அனுசரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement