உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரி மாவட்டத்தில் பாயும் ஈசான் ஆற்றில் இராமர் பெயர் பொறிக்கப்பட்ட மிதக்கும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தானா பேவர் கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் சிலர் ஆற்றில் மீன்பிடிக்க சென்றபோது, கருப்பு நிறத்தில் ஆற்றில் மிதந்து வரும் கல்லை கண்டுள்ளனர். சுமார் 5.7 கிலோ எடை கொண்டுள்ள கல் இராமாயண காலத்தில் இலங்கைக்கு இராமர் பாலம் கட்ட பயன்படுத்தப்பட்டதாகவும், ராமேஸ்வரத்தில் இருந்து வந்திருப்பதாகவும் கிராம மக்கள் கூறினர்.
மேலும், அந்த கல்லை பிரதிஷ்டை செய்து வழிபட முடிவெடுத்துள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.