ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு இயங்கி வரும் எண்டர்பிரைஸ் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி நிறுவனமான பைரைட் டெக்னாலஜிஸ் 2022ஆம் ஆண்டில் 27 ஏப்ரல் முதல் ஜூலை 22 வரையிலான சுமார் 90 நாட்களில் மொட்டா நிறுவனத்தில் விளம்பரத்திற்காக அதிகம் செலவு செய்தது யார் என்பதற்கான தகவலைத் திரட்டியுள்ளது.
ஏப்ரல் 27 மற்றும் ஜூலை 25-க்கு மத்தியில் Meta நிறுவனம் இந்தியாவில் சுமார் 12,863 விளம்பரதாரர்களைப் பெற்றுள்ளது, இவர்கள் மூலம் விளம்பர வருவாயாகச் சுமார் 13.94 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இந்தியாவில் வளர்ந்து வரும் விளம்பரதாரர்கள் மற்றும் பயனர்களின் எண்ணிக்கை, இந்தியா பேஸ்புக்கின் சிறந்த சந்தையாக மாற்றியுள்ளது.
கோமியம் லிட்டர் 4 ரூபாய்.. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் முக்கிய அறிவிப்பு..!
ஈஷா யோகா
பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என இரு விளம்பரம் செய்யும் தளங்கள் உள்ளது. இந்த இரு தளத்தில் 27 ஏப்ரல் முதல் ஜூலை 22 வரையிலான சுமார் 90 நாட்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈஷா அமைப்பு தான் அதிகளவிலான தொகையை விளம்பரத்திற்காகச் செலவு செய்துள்ளது.
சத்குரு மற்றும் ஈஷா அவுட்ரீச்
பைரைட் டெக்னாலஜிஸ் (Pyrite Technologies) வெளியிட்ட அறிக்கையின்படி, சத்குரு மற்றும் ஈஷா அவுட்ரீச் கான்சியஸ் பிளானட் ஆகியவை தான் சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காக மெட்டா தளங்களில் இந்தியாவின் மிகப்பெரிய விளம்பரதாரர்கள் மெட்டா நிறுவன தரவுகள் கூறுகிறது.
1.20 கோடி ரூபாய்
சத்குரு மற்றும் ஈஷா அவுட்ரீச் கான்சியஸ் இணைந்து இந்த 90 நாட்களில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்-ல் மொத்தம் 1.20 கோடி ரூபாயை விளம்பரத்திற்காகச் செலவிட்டுள்ளனர். அதாவது ஒரு நாளுக்கு 1.35 லட்சம் ரூபாயை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்காகச் செலவு செய்துள்ளனர்.
சத்குரு ஜக்கி வாசுதேவ்
ஈஷா மையத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்தியாவின் பிரபலமான யோகா குரு-வாகத் திகழ்கிறார். சத்குரு ஜக்கி வாசுதேவ்-க்கு இன்ஸ்டாகிராமில் 8.5 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்களும், பேஸ்புக்கில் 5.2 மில்லியன் பாலோவர்களும், ட்விட்டரில் 3.9 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்களும் உள்ளனர்.
ஈஷா அறக்கட்டளை
சதுகுருவின் ஈஷா அறக்கட்டளை, அதன் இணையத் தளத்தின்படி, ஈஷா ரைமென்ட் (Isha Raiment), ஈஷா ஃபுட்ஸ் அண்ட் ஸ்பைசஸ், ஈஷா கிராஃப்ட்ஸ், ஈஷா நேச்சுரோ ஆர்கானிக் சொல்யூஷன்ஸ் போன்ற வணிக நிறுவனங்களைக் கொண்டு உள்ளது.
KOO நிறுவனம்
சத்குருவைத் தொடர்ந்து மிகப்பெரிய விளம்பரதாரர்கள் பட்டியலில் மைக்ரோ-பிளாக்கிங் தளமான KOO உள்ளது. இந்நிறுவனம் சுமார் 90 நாட்களில் மெட்டா தளத்தில் கிட்டத்தட்ட 87 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளது. 2019 இல் தொடங்கப்பட்ட KOO சமீபத்தில் காஸ்பியர் வென்ச்சர் பார்ட்னர், அஷ்னீர் குரோவர் மற்றும் ரவி மோடி குடும்ப அறக்கட்டளை மூலம் 79 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்டியது.
டாப் விளம்பரதாரர்
sadhguru – 99 லட்சம் ரூபாய்
KOO – 87 லட்சம் ரூபாய்
Voot Select – 67 லட்சம் ரூபாய்
UNICEF – 48 லட்சம் ரூபாய்
Kutumb – 45 லட்சம் ரூபாய்
GiveIndia – 43 லட்சம் ரூபாய்
Meta – 37 லட்சம் ரூபாய்
GiveIndia – 33 லட்சம் ரூபாய்
Mint – 26 லட்சம் ரூபாய்
Isha Outreach Conscious Planet – 21 லட்சம் ரூபாய்
Bharatiya Janata Party (BJP) – 15 லட்சம் ரூபாய்
BJP Gujarat – 15 லட்சம் ரூபாய்
டாப் மாநிலங்கள்
உத்தரப்பிரதேசம் – 16,803,669.00 ரூபாய்
மகாராஷ்டிரா – 13,817,749.00 ரூபாய்
குஜராத் – 11,149,150.00 ரூபாய்
மத்திய பிரதேசம் – 10,358,160.00 ரூபாய்
கர்நாடகா – 8,158,038.00 ரூபாய்
மேற்கு வங்காளம் – 6,400,144.00 ரூபாய்
ராஜஸ்தான் – 6,303,199.00 ரூபாய்
தெலுங்கானா – 6,186,746.00 ரூபாய்
பீகார் – 5,877,382.00 ரூபாய்
டெல்லி – 5,616,891.00 ரூபாய்
தமிழ்நாடு – 5,120,897.00 ரூபாய்
ஆந்திரப் பிரதேசம் – 4,663,189.00 ரூபாய்
ஹரியானா – 4,438,400.00 ரூபாய்
கேரளா – 2,917,781.00 ரூபாய்
பஞ்சாப் பகுதி – 2,867,640.00 ரூபாய்
ஒடிசா – 2,376,029.00 ரூபாய்
சத்தீஸ்கர் – 2,192,962.00 ரூபாய்
அசாம் – 2,131,284.00 ரூபாய்
ஹிமாச்சல பிரதேசம் – 2,004,599.00 ரூபாய்
ஜார்கண்ட் – 1,844,465.00 ரூபாய்
உத்தரகண்ட் – 1,496,120.00 ரூபாய்
திரிபுரா – 1,325,703.00 ரூபாய்
மேகாலயா – 1,318,996.00 ரூபாய்
ஜம்மு காஷ்மீர் – 1,089,387.00 ரூபாய்
சண்டிகர் – 348,018.00 ரூபாய்
மணிப்பூர் – 286,459.00 ரூபாய்
அருணாச்சல பிரதேசம் – 270,810.00 ரூபாய்
கோவா – 259,268.00 ரூபாய்
புதுச்சேரி – 169,795.00 ரூபாய்
நாகாலாந்து – 147,225.00 ரூபாய்
சிக்கிம் – 132,323.00 ரூபாய்
மிசோரம் – 126,721.00 ரூபாய்
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி – 71,474.00 ரூபாய்
தெரியவில்லை – 42,135.00 ரூபாய்
அந்தமான் நிக்கோபார் தீவுகள் – 26,867.00 ரூபாய்
லட்சத்தீவு – 951.00 ரூபாய்
Sadhguru, Isha Outreach spent 1.2 crore on Facebook, Insta ads; Top spender in india Btw 27April-July 22
Sadhguru, Isha Outreach spent 1.2 crore on Facebook, Insta ads; Top spender in india Btw 27April-July 22 ஈஷா சத்குரு: 90 நாளில் ரூ.1.20 கோடி செலவு.. எதற்காகத் தெரியுமா..?!