தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே மீண்டும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணலாமோ என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது.
தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இதனால் ரெசசன் அச்சமும் எழுந்துள்ளது. குறிப்பாக வேலையின்மை அதிகரிக்கலாம். வறுமை அதிகரிக்கலாம். மக்கள் கையில் பணப்புழக்கம் குறையலாம். இது எல்லாம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
3 நாளில் தங்கம் விலை ரூ.1000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு.. வாங்கலாமா, வேண்டாமா?
டாலர் மதிப்பு
தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது தடுமாற்றத்தில் இருந்து வரும் நிலையில், தங்கம் விலையானது சற்று ஏற்றத்திலேயே இருந்து வருகின்றது. டாலர் மதிப்பானது மூன்று வார குறைந்தபட்ச மதிப்பானது 105.05 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி தரவு
அமெரிக்காவின் உற்பத்தி ஆர்டர்கள் குறித்த தரவானது வெளியாகியுள்ளது. இது சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் குறித்து சுட்டிக் காட்டியுள்ளது. இது எதிர்பார்ப்பினை விட குறைந்துள்ளது.49.2 ஆக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ஆக வந்துள்ளது. இது தேவை குறைந்துள்ளதை சுட்டிக் காட்டுகின்றது.
பண்ணை அல்லாத வேலை தரவு
பண்ணை அல்லாத வேலை குறித்தான தரவானது வரவிருக்கும் நாட்களில் வெளியாகவுள்ளது. இது மேற்கொண்டு தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். இதுவும் பொருளாதார வளர்ச்சியினை சுட்டிக் காட்டும் ஒரு கருவியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது தங்கம் விலை ஏற்றம் காண காரணமாக அமையலாம்.
தேவை அதிகரிக்கலாம்
சரிந்து வரும் அமெரிக்க டாலரின் மதிப்பு, அமெரிக்க பத்திர சந்தையும் சரிவினைக் காண வழிவகுக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவையினை அதிகரிக்கலாம். இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பொருளாதார வளர்ச்சியும் சரிவு பாதையில் உள்ளது. ஆக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்க இது காரணமாக அமையலாம்.
சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 2.60 டாலர்கள் அதிகரித்து, 1790.30 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலை அதிகரித்திருந்தாலும், வெள்ளி விலை சற்று குறைந்து 20.177 டாலராக குறைந்து காணப்படுகின்றது. இது கிட்டத்தட்ட 1% குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?
இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி, 10 கிராம்,37 ரூபாய் அதிகரித்து, 51,554 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 402 ரூபாய் குறைந்து, 57,924 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலை பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், வெள்ளி விலை சற்று குறைந்து தான் காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை இன்று அதிகரித்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 4820 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 38,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 28 ரூபாய் அதிகரித்து, 5258 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 42,064 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,580 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 30 பைசா அதிகரித்து. 63.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 636 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 63,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.48,200
மும்பை – ரூ.47,350
டெல்லி – ரூ.47,500
பெங்களூர் – ரூ.47,400
கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,200
gold price on 2nd August 2022: Gold prices surged on recession fears
gold price on 2nd August 2022: Gold prices surged on recession fears/எகிறிய தங்கம் விலை.. சாமானியர்கள் இனி கனவில் தான் நினைக்கணும் போல..!