அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பதவி வகிப்பவர் நான்சி பொலேசி. இந்நிலையில் நான்சி பல்வேறு நாடுகளுக்கு தனது சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ளார். சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக தாய்வானுக்கும் சொல்கிறார்.
சீனாவில் இருந்து பிரிந்த நாடு தாய்வான் என்பதால் தைவானை மீண்டும் சீனாவில் இணைக்க சீனா முயற்சித்து வருகிறது. இந்நிலையில் நான்சி தைவானுக்கு பயணம் செய்வது சீனாவை கோபம் கொள்ளச் செய்துள்ளது.
நான்சி பெலோசி, இன்று இரவு தைவான் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கான சிவப்பு கம்பள வரவேற்பு தயாராகி வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வந்தது. மலேசியாவில் இருந்து தைவானுக்கு செல்லும் நான்சி பெலோசி தைவானில் இரவு தங்குகிறார்.
அமெரிக்க ‘வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில்’ செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில் “ நான்சி பெலூசிக்கு தைவான் செல்ல உரிமை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
நான்சி பெலோசி வருகைக்கு இதுவரை தைவான் அரசு எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காதநிலையில் தைவான் பிரதமர் சூ செங் சாங் பேசுகையில் “ நான்சி பெலோசி வருகை குறித்து எந்தத் தகவலும் இல்லை. அதேசமயம், பெலோசி ஆதரவுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
நான்சி ஏப்ரல் மாதமே தாய்வானில் செல்ல திட்டமிட்டிருந்தார் ஆனால் அவருக்கு ஏற்பட்டிருந்த கொரோனா தொற்று காரணமாக பயணம் ரத்தானது. எனவே தற்போது அவர் தைவானுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
சீனாவில் இருந்து பிரிந்து தைவான் உருவானதை மனதில் வைத்து சீனா இத்தகைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அவ்வபோது தைவான் எல்லைக்குள் சீன விமானங்கள் நுழைவதும் வழக்கமாகி உள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி தைவான் பயணம் மேற்கொள்வது உலக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.