ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்த தகராறில் இளைஞரை வெட்டிக்கொன்றதாக இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, அப்பகுதியில் உள்ள விளாரி ஏரியில் மீன்பிடிப்பதற்கான குத்திகையை எடுத்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் சேர்ந்த 21 வயதான கலையரசன், இரவு நேரங்களில் குத்தகைக்காரர்களுக்கு தெரியாமல் விளாரி ஏரியில் மீன் பிடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கலையரசன் உடன் சுப்பிரமணியின் நண்பர்கள் தினகரன், அசோக் தகராறு செய்த நிலையில் இருதரப்பு மீதும் காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது.
இந்நிலையில், மீண்டும் கலையரசன் நேற்று இரவு ஏரியில் மீன் பிடித்ததால், ஏற்பட்ட கைக்கலப்பில் கலையரசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு தினகரனை வெட்ட முயற்சித்துள்ளார் அப்பொழுது குருக்கிட்ட அசோக் அந்த கத்தியை பிடுங்கி கலையரசை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.