கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சுதாகர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு நேற்று காரில் மீண்டும் ஊட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது திருப்பத்தூர் மாவட்டம் நெக்குந்தி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, ஓசூர் நோக்கி முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதி, சாலையின் நடுவே கவிழ்ந்தது.
இதில் சுதாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.