”காதலுக்கு கண்ணில்ல OK.. மூளை?” -காதலிக்காக பெண்கள் கழிவறையில் தங்கி காதலன் செய்த காரியம்!

காதலுக்கு கண் இல்லைனு சொல்வது உண்மைதான் போல என எண்ண வைக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபரின் செயல்.
எல்லாருமே காதலிப்பது வழக்கம்தான். ஆனால் அந்த காதலுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அந்த வகையில், பெங்களூருவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு விலையுயர்ந்த மொபைலை பரிசாக கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு இரவு முழுவதும் பெண்கள் கழிவறையில் தங்கியிருந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
பெங்களூருவின் ஜே.பி.நகர் பகுதியில் உள்ள மிகப்பெரிய எலக்ட்ரானிக் ஷோருமிற்கு சென்ற அப்துல் முனாஃப் என்ற இளைஞன், கடையை மூடும் போது நைசாக ஷோருமில் உள்ள பெண்கள் கழிப்பறையில் ஒளிந்துக் கொண்டிருந்திருக்கிறார்.
image
கடை மூடப்பட்ட பிறகு, அங்குள்ள விலையுயர்ந்த 7 செல்ஃபோன்களை எடுத்துக்கொண்டு மீண்டும் அதே பெண்கள் கழிவறைக்குள் தஞ்சமடைந்தவர் அங்கேயே தங்கியிருக்கிறார். மறுநாள் காலை கடை திறந்ததும் எதுவுமே நடக்காதது போல ஷோரூமை விட்டு வெளியேறியிருக்கிறார்.
அப்போது, அப்துல் முனாஃபிடம் இருந்த 7 செல்ஃபோன்களில் ஒன்று ஷோரூமின் தரையில் கிடந்ததை கண்ட ஊழியர் கொடுத்த தகவலின் பேரில் செல்ஃபோன் திருடப்பட்டது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து, அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்த பிறகு IMEI நம்பரை வைத்து திருடப்பட்ட செல்ஃபோன் இருக்கும் இடமும், திருட்டில் ஈடுபட்ட அப்துல் முனாஃபும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பீகாரின் பூர்னே பகுதியைச் சேர்ந்த அப்துல் முனாஃப் BTM லேஅவுட் பகுதியில் உள்ள ரெஸ்டாரன்ட்டில் வேலை பார்த்து வருகிறார்.
image
அவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த மங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவரை கவர வேண்டும் என்பதற்காக அவருக்கு விலை உயர்ந்த செல்ஃபோனை பரிசாக கொடுக்க வேண்டும் என எண்ணியிருக்கிறார்.
இதற்காக காசு செலவழிக்காமல் பரிசளிப்பது என யோசித்து, எப்படி மொபைல் ஃபோனை திருடுவது என இன்டெர்நெட்டில் தேடி பார்த்திருக்கிறார். அதன்படியே கடந்த ஜூலை 27ம் தேதியன்று ஜே.பி.நகரில் உள்ள ஷோரூமிற்கு சென்று தனது வேலையை காட்டியிருக்கிறார். மேலும் திருடப்பட்ட 6 செல்ஃபோனில் ஒன்றை காதலிக்கு கொடுக்க, எஞ்சிய ஐந்தில் ஒன்றை முனாஃப் பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.
விசாரணைக்கு பின்னர் முனாஃபிடம் இருந்து 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 6 மொபைலும் கைப்பற்றப்பட்டதோடு, அவர் மீது வழக்குப் பதிந்து நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.