வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பர்மிங்காம்: காமன்வெல்த் ஆண்களுக்கான 96 கிலோ பிரிவு பளுதுாக்குதலில் இந்தியா சார்பில் விகாஷ் தாகூர் பங்கேற்றார். ஸ்னாட்ச் பிரிவில் 155 கிலோ துாக்கினார் விகாஷ். அடுத்து ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் 191 கிலோ துாக்கினார். மொத்தம் 346 கிலோ துாக்கிய விகாஷ், இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
ஹர்ஜிந்தர் ‘வெண்கலம்’
பெண்களுக்கான 71 கிலோ பிரிவு பளுதுாக்குதலில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் பங்கேற்றார். ஸ்னாட்ச் பிரிவில் 93 கிலோ துாக்கினார். அடுத்து ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் 119 கிலோ துாக்கினார். மொத்தம் 212 கிலோ துாக்கிய இவர், நான்காவது இடத்தில் இருந்தார். இதனிடையே ‘ஸ்னாட்ச் பிரிவில் 100 கிலோ துாக்கிய நைஜரீயாவின் ஜாய் எஜி, ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் 125 கிலோ துாக்க முயற்சித்தார். மூன்று வாய்ப்புகளிலும் துாக்க முடியாமல் போக, ஹர்ஜிந்தர் கவுர் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். கடைசியில் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இவருக்கு பஞ்சாப் அரசு ரூ. 40 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
பூணம் யாதவ் சர்ச்சை

பெண்களுக்கான 76 கிலோ பளுதுாக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் பூணம் யாதவ் பங்கேற்றார். ‘ஸ்னாட்ச்’ பிரிவில் இவர் அதிகபட்சம் 98 கிலோ துாக்கினார். அடுத்து நடந்த ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் 116 கிலோ துாக்கினார். ஆனால் கையை அளவுக்கு அதிகமாக வளைத்தார் என தெரிவித்த அம்பயர்கள், ‘ரெட்’ வழங்கினர். தொடர்ந்து மூன்று வாய்ப்புகளிலும் பூணம் யாதவுக்கு ‘ரெட்’ கிடைத்தது. பின் பதக்க வாய்ப்பை இழந்து, கடைசி இடம் பிடித்தார். இவர் காயத்தை மறைத்து போட்டியில் பங்கேற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement