கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் சாதனை

2022 ஆண்டிற்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா பாசிக்குடா கடற்கரையில் (30)  இடம்பெற்றது.

இதில் கடற்கரை கபடிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவு  பெண்கள் அணியின் முதலாம் இடத்தினை தம்வசப்படுத்தி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டித் தொடரானது கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் மட்டக்களப்பு பாசிக்குடாவில் நடைபெற்றுள்ளது.

விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி
கடற்கரை கபடிப் போட்டியில் பங்கேற்ற மண்முனை வடக்கு மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவுகளின்  வீரர்களை உள்ளடக்கி கலந்து கொண்ட அணி மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

Media Unit, – Batticaloa
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.