குளியலறை மற்றும் கழிவறையின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
அதற்காகவே வீட்டு குளியலறையை சுத்தமாக வைத்துக் கொள்வோம்.
இருப்பினும் நாம் இன்னும் தவறுகளை செய்து கொண்டிருக்கிறோம். அந்த தவறுகளின் மூலம் நோய்த்தொற்றுகளானது மிகவும் வேகமாக பரவுகிறது.
குளியலறை மற்றும் கழிவறையில் செய்யக்கூடாத தவறுகள் குறித்து காண்போம்
செல்போன்
செல்போனை கழிவறைக்கு எடுத்து செல்லும் பழக்கம் பலருக்கு உள்ளது.
இப்படி கழிவறைக்கெல்லாம் மொபைல் போனை எடுத்துச் சென்றால், அதனை அங்குள்ள பலகையில் வைக்கும் போது, அதிலிருந்து பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொண்டு, அதன் மூலம், பல நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
SHUTTERSTOCK
வெஸ்டர்ன் டாய்லெட்
வெஸ்டர்ன் டாய்லெட்டை ஃப்ளஷ் செய்யும் போது, அதிலிருந்து வெளிவரும் சிறு நீர் துளிகள் வெளியே பட்டு, அதன் காரணமாக பல்வேறு நோய்த்தொற்றுக்கள் வரும் வாய்ப்புள்ளது.
இதை தடுக்க வெஸ்ட்ர்ன் டாய்லெட்டை ஃப்ளஷ் செய்யும் போது, மூடிக் கொண்டு ஃப்ளஷ் செய்யுங்கள்.
pattersonplumbing
மேக்கப்
குளியலறையில் மேக்கப் பொருட்கள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் குளியலறையில் உள்ள பாக்டீரியாக்கள் மேக்கப் பொருட்களில் நுழைந்து, பின் மேக்கப் போடும் போது சருமத்தை தாக்கிவிடும்.
டவல்/துண்டு
குளித்து முடித்த பின் பயன்படுத்தும் டவலை பலர் குளியலறையிலேயே வைத்துவிடுவார்கள். இப்படி ஈரப்பதமான டவலை குளியலறையிலேயே வைத்தால், எளிதில் பாக்டீரியாக்களானது டவலில் வளர ஆரம்பித்துவிடும். ஆகவே குளித்து முடித்த பின் அந்த டவலை சூரிய வெளிச்சத்தில் உர வைக்க வேண்டும்.
பல் துலக்கும் பிரஷ்
நிறைய வீடுகளில் டூத் பிரஷ்ஷானது குளியலறையில் தான் இருக்கும். இதனால் எப்போதும் ஈரப்பதமான சூழ்நிலையில் வளரும் பாக்டீரியாக்கள் டூத் பிரஷ்ஷில் ஊடுருவி வளர ஆரம்பிக்கும்.
uamshealth