கேரளாவில் கடந்த சில நாட்களாக குரங்க அம்மை சற்று தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது. திருச்சூரில் குரங்கு அம்மை அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
அத்துடன் இன்று மேலும் ஒருவருக்கு இந்த அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் குரங்கு அம்மைக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
இப்படி அம்மை நோய் ஒருபுறம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில்் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலும் கேரளாவில் பரவ தொடங்கி உள்ளது. அந்த மாநில மக்களின் அச்சத்தை அதிகரித்துள்ளது.
கண்ணூர் பகுதியில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதை மாவட்ட சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி, அங்கு பண்ணைகளில் உள்ள பன்றிகளை அழிக்கும் பணி இன்று தொடங்கி உள்ளது. மொத்தம் சுமார் 250 பன்றிகள் அழிக்கப்பட உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் வயநாடு பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பன்றிகள அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.