வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்; கேரளாவில் கொலை வழக்கில் சிக்கிய ஆலப்புழா மாவட்ட கலெக்டருக்கு மக்கள் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்ட கலெக்டராக ஸ்ரீராம் வெங்கட்ரமன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு காங். மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தின. இதையடுத்து நேற்று சில ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாறுதல் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றது. உடன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக நடந்த விசாரணையில் ஸ்ரீராம் வெங்கட்ராமன், கடந்த 2019-ல் மது அருந்தி வேகமாக கார் ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதில் பஷீர் என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி, 2020 ல் ஜாமினில் வெளியே வந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஸ்ரீராம் வெங்கட்ராமனை ஆலப்புழா மாவட்ட கலெக்டராக அரசு நியமித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து சிவில் சப்ளை கார்ப்பரேசன் பொது மேலாளராக இடமாற்றம் செய்து கேரள அரசு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement