வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள கணக்குகளின் ‘புரொபைல் பிச்சர்’ எனப்படும் சுயவிபர படமாக, மூவர்ணக் கொடியை மாற்றியுள்ளார்.
நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தின்படி, ஆக.,13 முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கையாவின் பிறந்த நாளான, ஆக., 2 முதல், சுதந்திர தினமான ஆக., 15 வரை, மக்கள் அனைவரும் சமூக வலைதள கணக்குகளில் ‘புரொபைல் பிச்சர்’ எனப்படும் சுயவிபர படமாக, மூவர்ணக் கொடியை வைக்க வேண்டும். எனவும் வலியுறுத்தினார்.
அதன்படி, இன்று (ஆகஸ்ட் 2) பிரதமர் மோடி, தனது சமூக வலைதளப் பக்கங்கள் அனைத்திலும் தேசியக் கொடி படத்தை ‛புரொபைல் பிச்சராக’ வைத்து பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் தங்களது சுயவிபர படத்தை மாற்றி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மிகப் பெரும் மக்கள் இயக்கமாக கொண்டாடி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுபோல் மாற்றி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement