சம்பளமும் வரவில்லை, ஐடிஆர் படிவம் 16ம் தரவில்லை… பரிதாபத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியர்கள்!

வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 என்பது முடிந்து விட்ட நிலையில் இன்னும் தங்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவம் 16 தரவில்லை என்றும் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த மாத சம்பளமும் எங்களுக்கு வரவில்லை என்று அவர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும் அதனால்தான் ஒரு சிலருக்கு இன்னும் சம்பளம் கூட போடவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

கண்ணை மறைத்த காதல்… பெங்களூரு மொபைல்போன் ஷோரூம் சென்ற காதலனின் விபரீத செயல்!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் சிலருக்கு இன்னும் ஜூலை மாத சம்பளம் தரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் சம்பளம் தரப்படும் என்று கூறியுள்ளது. இன்னும் 45% ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளதாகவும் அந்நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடன் சிக்கல்

கடன் சிக்கல்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடனில் சிக்கித் தவிப்பதாகவும், அதனால் தான் தனது 45 சதவீத ஊழியர்களுக்கு சம்பளத்தை தாமதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஊழியர்களின் சம்பளத்தில் வரி பிடித்தம் (டிடிஎஸ்) செலுத்துவதற்கான காலக்கெடுவையும் அந்நிறுவனம் தவறவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஊழியர்களின் சம்பளம்
 

ஊழியர்களின் சம்பளம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை பொருத்தவரை ஒவ்வொரு மாதமும் 30 ஆம் தேதி சம்பளம் சரியாக தரும் ஒரு நிறுவனமாகத்தான் இருந்துள்ளது. ஆனால் இந்த மாதம் கேபின் குழு மற்றும் விமானிகள் முதல் பொறியாளர்கள் மற்றும் நிர்வாகத் துறைகள் வரை இன்னும் சம்பளத்தைப் பெறவில்லை. இதுகுறித்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியபோது, ‘ஜூலை 30 முதல் சம்பளம் வரவு வைக்கப்பட்டு வருகிறது என்றும், இதுவரை 55 சதவீத ஊழியர்களின் சம்பளம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்ற ஊழியர்களின் சம்பளம் காலதாமதம் ஆனதாகவும் தெரிவித்தார்.

படிவம் 16

படிவம் 16

மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் படிவம் 16 ஐ இன்னும் தராததால், தங்களால் வரி செலுத்த முடியவில்லை என்றும் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் கூறியுள்ளனர். தற்போது வரி செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால் இனி அபராதத்துடன் தான் தாங்கள் வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்றும் ஊழியர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

டிடிஎஸ்

டிடிஎஸ்

அதுமட்டுமின்றி, ஊழியர்களின் சார்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இன்னும் டிடிஎஸ் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம், 95 சதவீத ஊழியர்களுக்கான டிடிஎஸ் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் டெபாசிட் செய்யப்படும் என்றும், மீதமுள்ளவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் டெபாசிட் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SpiceJet staff yet to receive Form-16 to file ITR, not received salary also!

SpiceJet staff yet to receive Form-16 to file ITR, not received salary also! | சம்பளமும் வரவில்லை, ஐடிஆர் படிவம் 16ம் தரவில்லை… பரிதாபத்தில் பிரபல விமான நிறுவன ஊழியர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.