அமெரிக்காவின் உற்பத்தி துறை மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலைக்கு அடையும் அச்சம் உருவாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகப்படியான பிரச்சனைகள் இருக்கும் நிலையில், தற்போது உற்பத்தி குறைந்துள்ளது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகம் பதிவான நிலையில் மும்பை பங்குச்சந்தை 4 நாள் தொடர் உயர்வில் இருந்து வெளியேறி, இன்று சரிவை சந்தித்துள்ளது.
இன்று அதானி கிரீன் எனர்ஜி, சீமென்ஸ், இன்டஸ் டவர்ஸ், Bosch, காட்ரிஜ் ப்ராபெர்டீஸ், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ், வோல்டாஸ், தீபக் நைட்ரேட், தெர்மேக்ஸ், பேங்க் ஆப் இந்தியா, ஷீலா ஃபோம், பிரிகேட் எண்டர்பிரைசர்ஸ், சரிகமா இந்தியா, ஷியாம் மெட்டாலிங்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இன்று காலாண்டு முடிவுகளை வெளியிடுகிறது.
Aug 2, 2022 10:28 AM
கன்சாய் நெரோலேக் பெயிண்ட்ஸ் நிறுவன பங்குகள் 13 சதவீதம் வரையில் உயர்வு
Aug 2, 2022 10:28 AM
AAI-க்கான அனைத்து நிலுவை தொகையை ஸ்பைஸ்ஜெட் தீர்த்தது
Aug 2, 2022 10:28 AM
ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 2.61 சதவீதம் வரையில் உயர்வு
Aug 2, 2022 10:28 AM
நிஃப்டி மெட்டல் குறியீடு 1 சதவீதம் வரையில் சரிவு
Aug 2, 2022 10:28 AM
சோமேட்டோ பங்குகள் காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு 7 சதவீதம் உயர்ந்துள்ளது
Aug 2, 2022 10:28 AM
ஐடிசி ஜூன் காலாண்டில் 33.46 சதவீத லாப வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
Aug 2, 2022 10:27 AM
அமெரிக்காவின் நீண்ட கால கருவூல பத்திரங்கள் 4 மாத சரிவை எட்டியுள்ளது
Aug 2, 2022 10:27 AM
இதன் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பு சரிந்தது
Aug 2, 2022 10:27 AM
அமெரிக்காவின் உற்பத்தி துறை தரவுகள் மந்தமான வளர்ச்சியை பதிவு செய்த நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது
Aug 2, 2022 10:20 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 78.95 ரூபாயாக துவங்கியுள்ளது
Aug 2, 2022 10:20 AM
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 79.02 ஆக இருந்தது
Aug 2, 2022 10:20 AM
பிரெண்ட் கச்சா எண்ணெய் 99 டாலராக சரிந்துள்ளது
Aug 2, 2022 10:20 AM
அமெரிக்காவின் உற்பத்தி துறை சரிவு
Aug 2, 2022 10:20 AM
ஆசிய பங்குகள் மொத்தமும் இன்று காலை சரிவுடன் துவங்கியுள்ளது
Aug 2, 2022 10:19 AM
அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் 2020-க்கு பின் மோசமான மாதாந்திர சரிவை பதிவு செய்துள்ளது
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live updates today 02 august 2022: slowing US manufacturing sector itc zomato adani green
sensex nifty live updates today 02 august 2022: slowing US manufacturing sector itc zomato adani green சென்செக்ஸ்: ஆரம்பமே 150 புள்ளிகள் சரிவு.. என்ன காரணம்..?