#சேலம் || மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை

சேலம் மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(36). இவரது மனைவி மகாலட்சுமி. இந்நிலையில் ரமேஷுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதையடுத்து நேற்று மதியம் மீண்டும் மது அருந்திவிட்டு வந்து மனைவிடம் தகராறு செய்த ரமேஷ், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இது குறித்து கிச்சிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.