சோமேட்டோ-வுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. முதலீட்டாளர்கள் உஷார்..!

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ வெளியிட்டு உள்ள ஜூன் காலாண்டு முடிவுகளில் 186 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்திருந்தாலும், கடந்த வருடத்தின் 359 கோடி ரூபாய் நஷ்டத்தை ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீதம் குறைவு. இதேபோல் சோமேட்டோ நிறுவனத்தின் வருவாய் 67.44% உயர்ந்து 1,413.9 கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் கீழ் இருக்கும் சோமேட்டோ, Blinkit, Hyperpure ஆகிய 3 நிறுவனத்திற்கும் தனித்தனி சிஇஓ அமைத்து அனைத்து நிறுவனங்களையும் Eternal என்னும் புதிய நிறுவனத்தின் கீழ் கொண்டு வர சோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் முடிவு செய்தார்.

இந்த அறிவிப்ப தொடர்ந்து சோமேட்டோ பங்குகள் இன்று 20 சதவீதம் உயர்ந்து 46 ரூபாய் என்ற வரலாற்றுச் சரிவில் இருந்து மீண்டு 55.55 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு வேற லெவல்.. ஆனா குஜராத்-ஐ முந்தவில்லை..!

உபர் டெக்னாலஜிஸ்

உபர் டெக்னாலஜிஸ்

உபர் டெக்னாலஜிஸ் இந்திய உணவு டெலிலரி நிறுவனமான சோமேட்டோ-வில் வைத்திருக்கும் 7.8% பங்குகளைப் புதன்கிழமை வர்த்தகத்தில் சுமார் 373 மில்லியன் டாலருக்கு பிளாக் டீல் மூலம் விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சோமேட்டோ பங்குகள்

சோமேட்டோ பங்குகள்

சோமேட்டோ பங்குகள் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்த குஷியில் இந்நிறுவன முதலீட்டாளர்கள் இருக்கும் வேளையில் உபர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விற்பனை புதன்கிழமை சோமேட்டோ-வின் தலையெழுத்தை மாற்றலாம்.

373 மில்லியன் டாலர்
 

373 மில்லியன் டாலர்

உபர் டெக்னாலஜிஸ் 373 மில்லியன் டாலர் மதிப்புள்ள 612 மில்லியன் பங்குகளின் குறைந்த பட்ச சலுகை அளவில் பிளாக் டீல் வாயிலாக 48-54 ரூபாய் விலையில் விற்பனை செய்ய உள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது இன்றைய சந்தை முடிவு விலையை ஒப்பிடுகையில் 2.8%-13.6% தள்ளுபடி விலையாகும்.

 

BofA செக்யூரிட்டீஸ்

BofA செக்யூரிட்டீஸ்

BofA செக்யூரிட்டீஸ் மட்டுமே இந்த ஒப்பந்தத்திற்கான ஒரே புக் ரன்னராகும், மேலும் ராய்ட்டர்ஸ் பார்த்த டெர்ம் ஷீட் சாத்தியமான விற்பனையாளரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் சந்தை பங்கு இருப்புகளின் படி சோமேட்டோ பங்குகளை விற்பது உபர் டெக்னாலஜிஸ் தான் என அறியப்படுகிறது. இதுவரை சோமேட்டோ மற்றும் உபர் டெக்னாலஜிஸ் இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை.

Uber நிறுவனம்

Uber நிறுவனம்

சோமேட்டோ நிறுவனம் திங்கட்கிழமை காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை Uber நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. ஜூன் காலாண்டில் உபர் 2.6 பில்லியன் டாலர் அளவிலான நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. இதில் 1.7 பில்லியன் டாலர் பங்கு முதலீடுகளுடன் தொடர்புடையது, சோமேட்டோ உட்பட.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா-வை டார்கெட் செய்கிறதா சீன உளவு கப்பல்..? என்ன நடக்குது..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Uber May sell 7.8 percent Zomato stake on August 3 via block deal; investors stay cautioned

Uber May sell 7.8 percent Zomato stake on August 3 via block deal; investors stay cautioned சோமேட்டோ-வுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி.. முதலீட்டாளர்கள் ஷாக்..!

Story first published: Tuesday, August 2, 2022, 21:49 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.