இந்தியாவில் வாகன உற்பத்தியும் சரி, வாகன விற்பனையும் சரி மாதந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதத்தில் வாகன உற்பத்தி மற்றும் வாகன விற்பனை குறித்த தகவல்களும் எந்தெந்த நிறுவனங்கள் வாகன விற்பனையில் சாதனை செய்துள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த தகவல்களின் அடிப்படையில் மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் ஜூலையில் விற்பனையில் வளர்ச்சியை பெற்றுள்ளன என்றும், MG மோட்டார் மற்றும் கியா வீழ்ச்சியடைந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.
கோமியம் லிட்டர் 4 ரூபாய்.. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் முக்கிய அறிவிப்பு..!

மாருதி – டொயோட்டா
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுஸுகி, டொயோட்டா மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா போன்றவை கார் விற்பனையில் ஆரோக்கியமான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் ஒரு சிறிய சரிவை கண்டுள்ளது. அதிகரித்து வரும் வாகன உற்பத்தி மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் எரிபொருள் விலை போன்றவை இருந்தாலும், இந்த இரு கார் தயாரிப்பு நிறுவனங்களும் ஜூலை மாதத்தில் விற்பனையில் ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

மாருதி சுஸுகிக்கு மறுமலர்ச்சி மாதம்
ஜூலை மாதத்தில் விற்கப்பட்ட ஒவ்வொரு இரண்டு கார்களில் ஒன்று மாருதியாக இருந்ததால் இம்மாதம் மாருதிக்கு ஒரு மறுமலர்ச்சி மாதமாக கருதப்படுகிறது. மாருதியின் Baleno, WagonR, Swift, Dzire ஆகியவை நல்ல விற்பனையாகி உள்ளன. அதேபோல் ஜூலையில் மாருதியின் ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ ஆகிய மாடல்களும் பிரெஸ்ஸா, எர்ட்ஜியா, எஸ்-கிராஸ் மற்றும் எக்ஸ்எல்6 ஆகியவையும் மக்களால் தொடர்ந்து விரும்பப்படுகின்றன.

வலுவான விற்பனையில் டொயோட்டா
ஜப்பானிய வாகன நிறுவனமான டொயோட்டா, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 2022ஆம் ஆண்டு ஜூலையில் 50% விற்பனை அதிகரித்து அதன் வலுவான மாதத்தை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் Innova Crysta, Fortuner மற்றும் Glanza ஆகியவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

டாடா EV விற்பனை
டாடாவின் நெக்ஸான் EV மேக்ஸ் என்ற எலக்ட்ரிக் கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த கார் ஜூலையில் 4,000க்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இருப்பினும் மொத்தத்தில் டாடாவின் ஜூலை மாத விற்பனை 1% குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் – டிவிஎஸ்
பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் ஜூலையில் ஓரளவு லாபங்களை பதிவு செய்துள்ளன. ஆனால் பஜாஜ் ஏற்றுமதியில் மட்டும் ஒரு சிறிய சரிவை சந்தித்துள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திராவுக்கு சொந்தமான மஹிந்திரா & மஹிந்திராவின் பங்குகள் திங்களன்று உயர்ந்ததில் இருந்தே அந்நிறுவனம் ஜூலையில் நல்ல விற்பனையை பதிவு செய்துள்ளன என்பதை காட்டுகிறது. மஹிந்திரா & மஹிந்திராவின் SUV மாடல்களான XUV700, தார், பொலேரோ மற்றும் XUV300 ஆகிய மாடல்கள் நல்ல விற்பனையை பதிவு செய்துள்ளன. ஜூலை மாதத்தில், மஹிந்திரா & மஹிந்திராவின் SUV பிரிவு 27,854 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

மஹிந்திராவின் ஸ்கார்பியோ-என்
மஹிந்திரா நிறுவனத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஸ்கார்பியோ-என் முன்பதிவு தொடங்கிய மூன்று மணி நேரத்தில் ஒரு லட்சம் ஆர்டர்களைப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பிலிப் கேபிட்டலின் ஆய்வாளர்கள் இந்த மாடல் குறித்து கருத்து கூறுகையில், ‘எங்கள் கருத்துப்படி, ஸ்கார்பியோ-என் மஹிந்திராவின் நிலையான மாடலில் இருந்து மற்றொரு பிளாக்பஸ்டர் மாடலாக இருக்கும்’ என்று கூறியுள்ளனர்.
Auto sales data July 2022: Maruti, Toyota in strong growth position!
Auto sales data July 2022: Maruti, Toyota in strong growth position! | ஜூலையில் வாகன உற்பத்தி… இந்த இரண்டு நிறுவனங்களும் டாப் சேல்ஸ்!