ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல்…. தொடர்ந்து 5வது மாதமாக சாதனை!

ஜிஎஸ்டி என்று கூறப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 28% அதிகரித்து ரூ.1.49 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த மே, ஜூன் மாதங்களின் ஜிஎஸ்டி வசூலை ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 3 சதவீதம் அதிகமாகும். அதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வரியைவிட இந்த ஆண்டு 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

அது மட்டுமின்றி தொடர்ந்து 5-வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளதும் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் 5% ஜிஎஸ்டி வரியை எதிர்க்கும் கேரளா.. ஜிஎஸ்டி விதிக்க மாட்டோம் – பாலகோபால் அறிவிப்பு

ஜூலை ஜிஎஸ்டி வசூல்

ஜூலை ஜிஎஸ்டி வசூல்

இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் ஜூலை மாதத்தில் இரண்டாவது அதிகபட்சத்தை எட்டியது என்பதும், அதே நேரத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் எட்டு மாத உச்சத்திற்குத் திரும்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது. வட்டி விகிதங்கள் அதிகரித்ததால் பொருளாதார மீட்சி உறுதியாக இருப்பதை குறிப்பிட்டாலும் எரிபொருள் விற்பனை, மின் தேவை, இரயில்வே சரக்கு மற்றும் கார் விற்பனை போன்ற பிற காரணங்களும் பொருளாதார வலிமையை சுட்டிக்காட்டுகிறது.

நிதி அமைச்சகம்

நிதி அமைச்சகம்

நிதி அமைச்சகத்தின் தகவலின்படி ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ஏப்ரல் மாதத்தை விட குறைவு என்றாலும், 2-வது அதிகபட்ச வசூலாக உள்ளது. மேலும் தொடர்ந்து 13 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது என்பதும், தொடர்ந்து 5-வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.1,49,000 கோடி ஜிஎஸ்டி
 

ரூ.1,49,000 கோடி ஜிஎஸ்டி

2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,000 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.25, 751 என்பதும், மாநில ஜிஎஸ்டி வரி ரூ.32,807 கோடி என்பதும் குறிபிடத்தக்கது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.79, 518 என்றும், செஸ் வரியாக ரூ.10,920 கோடி கிடைத்துள்ளது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார மீட்சி

பொருளாதார மீட்சி

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொருளாதார மீட்சி மற்றும் வரி ஏய்ப்பை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 28% உயர்ந்து ரூ.1.49 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

உள்நாட்டு வளர்ச்சி

உள்நாட்டு வளர்ச்சி

உலகளாவிய வளர்ச்சி பலவீனமடைந்தாலும், இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சி சரியான முறையில் வலுவாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று இந்திய பொருளாதார நிபுணர் ராகுல் பஜோரியா ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

உற்பத்தித் துறை PMI குறியீடு

உற்பத்தித் துறை PMI குறியீடு

உற்பத்தித் துறை PMI குறியீடு கடந்த ஜூன் மாதம் 53.9 புள்ளிகள் என இருந்த நிலையில் தற்போது ஜூலை மாதத்தில் 56.4 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

 மின்சார பயன்பாடு

மின்சார பயன்பாடு

இதேபோல் மின்சார பயன்பாடு கடந்த ஆண்டை காட்டிலும் 2.9 சதவீதம் அதிகரித்து 129 பில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதற்கு மாறி வரும் பருவ நிலை மாற்றங்கள் முக்கிய காரணம். சென்ற கோடையில் மட்டும் மிகப் பெரிய அளவில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு நிலக்கரி தட்டுப்பாடு வரை ஏற்பட்டது.

 பெட்ரோல், டீசல் விற்பனை

பெட்ரோல், டீசல் விற்பனை

மேலும் கடந்த ஜூலை மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை முறையே 12% மற்றும் 18% உயர்ந்துள்ளது. என்ன தான் எலக்ட்ரிக் வாகனம் பயன்பாடு ஆதிகரித்து வந்தாலும் அதன் மீது மக்களுக்கு உள்ள அச்சத்தால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை அதிகரித்துள்ளது. அதற்கு பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்டதும் காரணமாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

GST information for July level to agency restoration

GST, PMI information for July level to agency restoration | ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல்…. தொடர்ந்து 5வது மாதமாக சாதனை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.