44-வது செஸ் ஒலிம்பியாட்யில் விளையாடிவரும் இந்திய பி அணி வீரர் பிரக்ஞானந்தா ஆடிய போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. இந்த சிறு சருக்கலால் அவரை செஸ் ரசிகர்கள் கொண்டாட மறக்கவில்லை.
தமிழகத்தின் செல்லப் பிள்ளையாக பார்க்கப்படும் இந்திய பி அணி வீரர் பிரக்ஞானந்தா. இவர் இத்தாலி வீரர் லாரன்சோ லிடிசியை எதிர்கொண்டார். செஸ் போட்டியை பார்க்க வந்த அனைவரின் கண்களும் பிரக்ஞானந்தாவின் மீதே இருந்தது. ஆனால் அவரோ, தந்து விரிந்த கண்களால் செஸ் போர்டையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரது கழுத்து செஸ் போர்டுக்குள் நீண்டு கொண்டது. பிரக்ஞானந்தாவிற்கு ஆதரவாக அங்கிருந்தவர்களால், தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்த முடியாமல் இருந்தது. தன்னை சுற்றி இப்படி ஒரு கூட்டம் இருக்கிறது என்று தெரியாமல் தனது ஆட்டத்தை தொடர்ந்தார் பிரக்ஞானந்தா. அவரது கண்கள் தீடீரென்று துடித்தது. இந்நிலையில் ஆட்டத்தின் ஆரம்பத்தில் அவர் அபாரமான நகர்வுகளை செய்தார். இது இத்தாலிய வீரரை தடுமாற வைத்தது. ஆனால் பிரக்ஞானந்தாவின், சிப்பாய் காய் ஒன்று முதலில் நீக்கப்பட்டபோது, அவர் சற்று தடுமாறினார்.
மேலும் இத்தாலி வீரர் ஆட்டத்தை மெதுவாக நகர்த்தினார். அவர் நடுப்பகுதியில் எல்லா காய்களையும் வைத்திருந்தார். இருவரின் காய்களும் ஒரு பிரமிட் வடிவம் போல் காணப்பட்டது. பக்கவாட்டாக காய்களை நகர்த்தி தாக்குவதில் பிரக்ஞானந்தா மிகச் சிறந்தவர் என்று இத்தாலி வீரருக்கு தெரிந்ததால், அவர் மிகவும் கவனமாக விளையாடினார். அட்டத்தின் நடுப்பகுதியில் யார் வெல்வார்கள் என்ற குழுப்ப நிலை நீட்டித்தது. தனது பிஷப் காய்களை வைத்து பிரக்ஞானந்தா எதிர் ஆட்டக்காரரின் காய்களை சாய்க்க நினைத்தார். ஆனால் அது முடியவில்லை. 42 வது நகர்வில், இருவரும் கைகொடுத்து கொண்டு சமனில் போட்டியை முடித்துகொண்டனர். இது செஸ் ரசிகர்கள் எதிர்பாக்கவில்லை என்றாலும், பிரக்ஞானந்தாவை அவர்கள் கொண்டாட மறுக்கவில்லை. தங்கள் வீட்டு பிள்ளையாகவே அவரை அனைவரும் பார்க்கின்றனர். ஆட்டத்தின் முடிவில் அவரின் கையொப்பம் பெறவும், செல்ஃபி எடுத்துகொள்ளவும் ரசிகர்கள் குவிந்தனர். அவரை இளம் டெண்டுல்கராகவே ரசிகர்கள் கொண்டாடுகின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை.