புதுடில்லி: தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி, காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்க இருந்தார். இதற்காக அவருக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட சோதனையில், தனலட்சுமி தடை செய்யப்பட்ட ‘அனபோலிக் ஸ்டெராய்டு’ ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் அவர் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவருக்கு தடகள போட்டியில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஊக்கமருந்து விவகாரத்தில் தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு தடைக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய தவறை தனலட்சுமி ஒப்புக் கொண்டதால் தடைக்காலம் 4 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி: தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி, காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்க இருந்தார். இதற்காக அவருக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்