தமிழ்நாடு வேற லெவல்.. ஆனா குஜராத்-ஐ முந்தவில்லை..!

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) தரவுகளின்படி, பருவமழை காரணமாக அதிகரித்து வரும் விவசாய நடவடிக்கைகளுக்கு எதிரொலியாக ஜூலை மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.80 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது, இதேவேளையில் ஜூலை மாதத்தில் இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூல் 28 சதவீதம் அதிகரித்து 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும் உற்பத்தித் துறை PMI குறியீடு 53.9 புள்ளிகளிலிருந்து 56.4 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.மின்சாரப் பயன்பாடு கடந்த ஆண்டை காட்டிலும் 2.9 சதவீதம் அதிகரித்து 129 பில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனை 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் வரையில் தத்தம் உயர்ந்துள்ளது.

இந்தியா-வை முந்திய பங்களாதேஷ் நிலைமை இப்போ என்ன தெரியுமா..? 3 மாதம் மட்டுமே..!

வேலைவாய்ப்பின்மை

வேலைவாய்ப்பின்மை

ஜூன் மாதத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 7.80 சதவீதமாக இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று சிஎம்ஐஇ தரவு தெரிவித்துள்ளது. இந்தச் சரிவுக்கு மிகவும் முக்கியக் காரணமாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறையாக இருப்பது கூடுதல் சிறப்பு.

கிராமப்புற வேலைவாய்ப்பின்மை

கிராமப்புற வேலைவாய்ப்பின்மை

ஜூன் மாதத்தில் 265.2 மில்லியன் அல்லது 8.03 சதவீதமாக இருந்த கிராமப்புற வேலைவாய்ப்பின்மை ஜூலை மாதம் 6.14 சதவீதம் குறைந்து 272.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பருவமழை கடந்த வருடத்தைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ள இதேவேளையில் சீற்றதாக இருக்கும் எனவும் IMD அமைப்பு கணித்துள்ளது.

நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை
 

நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை

மறுபுறம், ஜூன் மாதத்தில் 7.80 சதவீதமாக இருந்த நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை ஜூலை மாதத்தில் 8.21 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஏனெனில் தொழில் மற்றும் சேவைகள் இரண்டிலும் வேலைகள், புதிய ஆர்டர்கள் குறைந்துள்ளன. இதுமட்டும் அல்லாமல் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

ஜூலை வேலைவாய்ப்பின்மை

ஜூலை வேலைவாய்ப்பின்மை

CMIE தரவுகளின்படி, நகர்ப்புற இந்தியாவில் வேலை வாய்ப்பு 0.6 மில்லியன் குறைந்து, 125.7 மில்லியனில் இருந்து 125.1 மில்லியனாகக் குறைந்துள்ளது. இதன் வாயிலாகவே வேலைவாய்ப்பின்மை ஜூன் மாதத்தில் 7.80 சதவீதமாக இருந்து ஜூலை மாதத்தில் 8.21 சதவீதமாக உயர்ந்துள்ளது.

10 சதவீதத்திற்கு மேல்

10 சதவீதத்திற்கு மேல்

இந்தியாவில் மொத்தமாக வேலைவாய்ப்பின்மை ஜூலை மாதத்தில் குறைந்துள்ள நிலையில் 10 சதவீதத்திற்கு மேல் கொண்ட 7 மாநிலங்கள் உள்ளது.

  • ஹரியானா – 26.9 சதவீதம்
  • ஜம்மு & காஷ்மீர் – 20.2 சதவீதம்
  • ராஜஸ்தான் – 19.1 சதவீதம்
  • பீகார் – 18.8 சதவீதம்
  • ஜார்கண்ட் – 14 சதவீதம்
  • கோவா – 13.7 சதவீதம்
  • திரிபுரா – 13 சதவீதம்

இந்த மாநிலங்கள் தான் இந்தியாவிலேயே அதிகப்படியான வேலைவாய்ப்பின்மை கொண்ட மாநிலங்களாக உள்ளது.

தமிழ்நாட்டின் நிலைமை

தமிழ்நாட்டின் நிலைமை

  • தமிழ்நாடு – 3 சதவீதம்
  • புதுச்சேரி – 2.8 சதவீதம்
  • குஜராத் – 2.2 சதவீதம்
  • மத்திய பிரதேசம் – 2 சதவீதம்
  • மேகாலயா – 1.5 சதவீதம்
  • ஒடிசா – 0.9 சதவீதம்
  • சத்தீஸ்கர் – 0.8 சதவீதம்

பிற மாநிலங்கள்

பிற மாநிலங்கள்

டெல்லி – 8.9 சதவீதம்
பஞ்சாப் – 7.7 சதவீதம்
சிக்கிம் – 6.5 சதவீதம்
ஹிமாச்சல பிரதேசம் – 6.3 சதவீதம்
மேற்கு வங்காளம் – 6.3 சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் – 5.8 சதவீதம்
தெலுங்கானா – 5.8 சதவீதம்
கேரளா – 4.9 சதவீதம்
அசாம் – 3.7 சதவீதம்
மகாராஷ்டிரா – 3.7 சதவீதம்
கர்நாடகா – 3.5 சதவீதம்
உத்தரப்பிரதேசம் – 3.3 சதவீதம்

ரஷ்ய நிறுவனத்தால் இந்தியாவுக்கு புதிய பிரச்சனை.. கடைசியில் பாதிப்பு மக்களுக்கு தான்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India’s unemployment rate at 6.80 Percent in July; CMIE says lowest in 6 months

India’s unemployment rate at 6.80 Percent in July; CMIE says lowest in 6 months தமிழ்நாடு வேற லெவல்.. ஆனா குஜராத்-ஐ முந்தவில்லை..!

Story first published: Tuesday, August 2, 2022, 19:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.