மஞ்சள் தூள் கலந்த பால் பொதுவாக, சளி, இருமல் காலங்களில் வீட்டில் செய்து கொடுக்கப்படும். இதை நீங்களும் குடிப்பீர்கள். கூடுதலாக அதில் மிளகுத் தூள் போடுவீர்கள். தினமும் இரவு தூங்கப்போகும் முன்பு மஞ்சள் தூள் கலந்த பால் குடிப்பதால், அதிக நன்மைகள் கிடைக்கிறது.
மஞ்சளில் வீக்கத்திற்கு எதிரான குணம் இருக்கிறது. மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதிகமாக சாப்பிட்டால் அஜீரணம், வயிறு உப்புதல் போன்ற விளைவுகளும் ஏற்படும். மஞ்சள் உடல் அதை சரிப்படுத்திகொள்ள உதவுகிறது.
இரவு தூக்கம் உங்களுக்கு சரியாக வரவில்லை என்றால் மஞ்சள் கலந்த பாலை குடிக்கும்போது, தூக்கம் நன்றாக வரும். இரவு தூக்கத்திற்கு இடையே உங்களுக்கு விழிப்பு வந்தால், இதுவே ஒரு நல்ல தீர்வாக இருக்க முடியும்.
ஹார்மோன்கள் சுரப்பதை சீர்படுத்துகிறது. முகப்பரு மற்றும் மாதவிடாய் ஆகியவற்றை சரிப்படுத்துகிறது.
பாலை கொதிக்க வைத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து, கொஞ்சம் வெல்லம் சேர்த்து குடிக்கலம். ஒருவேளை உங்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் மூட்டு வலி இருந்தால், ஜாதிக்காய் பொடி சேர்த்து குடிக்கலாம். மேலும் தைராய்டு பிரச்சனைகள் இருந்தால், சிறிது முந்திரியை இதில் சேர்த்து குடிக்க