தென்காசி : செங்கோட்டை அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு
சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பணைகள், தனியார்
நீர்வீழ்ச்சிகள் மற்றும் ‘ரிசார்ட்’டுகளை இடித்து அப்புறப்படுத்தும் பணி
துவங்கியது.
அனுமதி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்
மேக்கரை அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர்
நிலம் உள்ளது.அனுமன் நதி குறுக்கே உள்ள அடவிநயினார் அணைக்கட்டு, ஆதீன
நிலத்தில் உள்ளது. குற்றாலம், பாபநாசம் வரும் சுற்றுலா பயணியரை
கவர்ந்திழுக்கும் வகையில் மேக்கரையில், 20க்கும் மேற்பட்ட ரிசார்ட்களை
அமைத்துள்ளனர்.
ஆதீன நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ரிசார்ட் அமைப்பவர்கள்
அவ்வழியாக செல்லும் அனுமன் நதி குறுக்கே தடுப்பணைகளை கட்டி, செயற்கை நீர்
நீர்வீழ்ச்சிகளை ஏற்படுத்தினர்.இதனால் அடவிநயினார் அணைக்கு வரும்
நீர்வரத்து குறைந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமும் பாசன வசதியின்றி
பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலி கலெக்டராக இருந்த கருணாகரன், அனுமதியில்லாத
இயற்கையை சீரழிக்கும் இந்த ரிசார்ட்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். சில
ஆண்டுகளாக இத்தகைய ரிசார்ட்களின் எண்ணிக்கை அதிகரித்தன. இதுகுறித்து எழுந்த
புகாரின்படி , தென்காசி கலெக்டர் ஆகாஷ் உத்தரவின்படி, பொதுப்பணி மற்றும்
வருவாய்த்துறையினர் செயற்கை நீர்வீழ்ச்சிகள் மற்றும் தடுப்பணைகளை, மணல்
அள்ளும் இயந்திரங்களால் இடித்து அப்புறப்படுத்தினர்.
தகராறு
நெடுஞ்சாலைத்துறை
உயர் அதிகாரி ஒருவர் அங்கு ரிசார்ட் கட்டியுள்ளார். அவர் பொதுப்பணி
மற்றும் வருவாய்த்துறையினரிடம் தகராறில் ஈடுபட்டார்.குண்டாறு அணைக்கட்டு
நீர்வரத்து பாதையிலும் அனுமதியின்றி, 20க்கும் மேற்பட்ட செயற்கை
நீர்வீழ்ச்சிகள் உள்ளன. வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, பயணியருக்கு ஆபத்து
ஏற்படும் நிலையுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement