தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடியாக வலம் வந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களின் காதலுக்கு பாலமான இருந்தது நான் தான் என்று நானும் ரவுடி தான் ராகுல் தாத்தா கூறியள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். தொடர்ந்து 3 வருட இடைவெளியில் அவர் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்தீபன், ராதிகா ஆர்.ஜே.பாலாஜி, உதயபானு (ராகுல் தாத்தா) ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் இணைந்து பணியாற்றும்போது விக்னேஷ் விசன் நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. விக்னேஷ் சிவனுக்கு முன்பு நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் பிரபுதேவா ஆகியோருடன் காதலில் இருந்த நயன்தாரா அந்த காதல் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவனை 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து கடந்த ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டார்.
இதனிடையே யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள உதயபானு (ராகுல் தாத்தா) நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையே காதல் மலர தான்தான் காரணம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சினிமா வாய்ப்பு இல்லாததால் ஊருக்கு வென்றுவிடலாம் என்று கிளம்பிக்கொண்டிருந்தோம். அப்போது தனுஷ் சார் ஆபீஸில் கூப்பிட்டதாக சொன்னார்கள்.
அங்கு போய் பார்த்தபோது மாரி படத்தில் நடிக்க வாயப்பு கொடுத்தார்கள் 3 நாட்கள் ஷூட்டிங் புறா வளர்க்கும் வயதானவர் என்று சொன்னார்கள். அப்போது அங்கு வந்த விக்னேஷ் சிவன் எனது போட்டோஷூட்டை பார்த்துவிட்டு நானும் ரவுடிதான் படத்திற்கு இவர்தான் தேவை என்று என்றை அழைத்துக்கொண்டார் என்று கூறியுள்ளார்.
மேலும் விக்கி நயன் குறித்து பேசியுள்ள அவர், இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் சென்று நீங்க பார்க்க பிரபுதேவா மாதிரியே இருக்கீங்க என்று சொல்லிவிட்டு, அப்படியே நயன்தாரா மேடம்ட போய் ஏன் மேடம் விக்கி பார்க்க பிரபுதேவா மாதிரியே இருக்காருல என்று சொன்னேன் அதன் பிறகு தான் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் நானும் ரவுடிதான் படத்தின் அத்தனைபேரும் எனக்கு வாழ்வளிக்கதவர்கள் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“