பழனி அருகே பாரிவேட்டை: வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 46 பேர் கைது – நடந்தது என்ன?

​திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் வேட்டைநாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழனி வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பழனி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் தொப்பம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

வேட்டைநாய்களுடன் கைது செய்யப்பட்டவர்கள்

​அப்போது நாற்பதுக்கும் மேற்பட்டோர் வேட்டை நாய்களு​டன் காட்டுப்பகுதிக்குள் ​சுற்றி ​திரிந்தது தெரியவந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் கரூர் மாவட்டம், தோகைமலை அடுத்த உள்ள பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. ​இவர்கள் அனைவரும் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பாரிவேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

​பழனி வனச்சரக அலுவலர் பழனிகுமார் தலைமையில் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு ஒ​ரே​​ சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் பாரிவேட்டையில் ஈடுபடுவதும், இந்த ஆண்டு பழனி பகுதியில் பாரிவேட்டையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.

வனவிலங்கு வேட்டை

பாரிவேட்டையில் வேட்டையாடப்படும் முயல்களை திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரப்பூரில் உள்ள பொன்னர்-சங்கர் கோயிலில் வைத்து வழிபாடு நடத்துவதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 26​ ​வேட்டை நாய்களுடன் 46​ ​பேரை​க்​ கைதுசெய்த வனத்துறையினர் பாரிவேட்டையில் ஈடுபடுவது சட்டப்படி தவறு என்றும், இனி வேட்டையாடக்கூடாது எனவும் எச்சரித்தனர். தொடர்ந்து வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதித்த வனத்துறையினர் கைதுசெய்யப்பட்டவர்களை எச்சரித்து அனுப்பினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.