பின் லேடனின் வலது கையாக இருந்த அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார்: ஜோ பைடன்

கடந்த 2011ம் ஆண்டு அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர்  ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு, மிகப்பெரிய பின்னடைவாக,  ஒசாமா பின் லேடனின் வலது கையாக இருந்த அதன் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானில் கடந்த வார இறுதியில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் உத்தரவின் படி அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார். அமெரிக்காவினால் தேடப்பட்டு வந்த உலகளாவிய பயங்கரவாதி மற்றும் அல்-கொய்தா தலைவன் அய்மன் அல்-ஜவாஹிரியை ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தியது. இதை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ட்ரோன் இரண்டு ஏவுகணைகளை அவர் மீது வீசியபோது, ​​ஜவாஹிரி மிகவும் பாதுகாப்பான வீட்டின் பால்கனியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அல்-ஜவாஹிரி குறித்த தகவல் அளிப்பவருக்கு, $25 மில்லியன் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் 9/11 பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதிகாரன் அல்-ஜவாஹிரி. இது தவிர, மேலும் பல பயங்கரவாத சம்பவங்களை அவர் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

சுமார் 6 மாதங்களுக்கு முன்பு அல்-ஜவாஹிரிக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கியது. இதனை நிறைவேற்ற, இரண்டு மாதங்களுக்கு முன், ஜவாஹிரியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஜவாஹிரியைக் கொல்ல அமெரிக்கா தனது ஆபத்தான நிஞ்ஜா ஏவுகணை I9X ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அல்-கொய்தாவின் மூத்த தலைவர் அபு அல்-கைர் அல்-மஸ்ரி, இதே ஆயுதத்தின் மூலம் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல வாரங்களாக காபூலில் முகாமிட்டுள்ள அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரியை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ உன்னிப்பாக கவனித்து வந்தது. ஜவாஹிரியின் ஒவ்வொரு அசைவையும் பற்றிய தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் பெற்று வந்தனர். வெள்ளை மாளிகையிலும் பென்டகனிலும் அமர்ந்திருந்த அதிகாரிகள் அவரை கொல்வதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தனர்.

அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி காபூலின் ஷெர்பூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த பகுதி,  மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதி. ஜவாஹிரி கொல்லப்பட்ட வீடு பல மாடிகளைக் கொண்டது. ஜவாஹிரி தனது குடும்பத்தினரை சந்திக்க ஜூலை 31 அன்று காபூலின் ஷெர்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இரண்டு ஹெல்ஃபயர் ஏவுகணைகளைப் பயன்படுத்தி அல் கொய்தா தலைவரை அமெரிக்கா கொன்றது. ஜூலை 31ம் தேதி காலை 6.18 மணிக்கு ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் காபூலில் ஆளில்லா விமானத் தாக்குதலின் ஜவாஹிரியைத் தவிர, அவரது குடும்ப உறுப்பினர்களும் அங்கு இருந்தனர், ஆனால் வேறு எந்த உறுப்பினரும் பாதிக்கப்படவில்லை.

மேலும் படிக்க | இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.