தைபே : சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானில் தரையிறங்கிய சபாநாயகர் நான்சி பெலோசியின் விமானத்தை, 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பின்தொடர்ந்துள்ளனர்.
கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தைவானும் பிரிந்தன. ஆனால் தன்னாட்சி பெற்ற நாடான தைவானை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனிடையே அமெரிக்க பார்லி சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் செல்லவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. பெலோசியின் பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
எதிர்ப்புகளை மீறி அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஸ்பெர்19 விமானத்தில் சபாநாயகர் பெலோசி தைவான் சென்றடைந்தார். 25 ஆண்டுகளில் தைவான் சென்றுள்ள அமெரிக்க மக்கள் பிரதிநிதி நான்சி பெலோசி ஆவார். பெலோசி வருகையை தொடர்ந்து தைவான் மீதான ராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியை சீனா அதிகரித்துள்ளது.
இதனிடையே உலகளவில் விமானங்கள் இயக்கம் குறித்து தகவல்களை அளிக்கும் சர்வதேச விமான கண்காணிப்பு சேவை நிறுவனமான பிளைட்ரேடார் 24ன் தகவல் தொடர்பு இயக்குனர் இயன் பெட்செனிக் கூறியதாவது:-
அமெரிக்காவில் இருந்து சபாநாயகர் பெலோசி பயணித்த போயிங் ட் ஸ்பெர் 19 விமானம் புறப்பட்டது முதலே மக்களின் கவனத்தை பெற துவங்கியது. செவ்வாயன்று, விமானம் புறப்பட்டது முதல் எங்கள் சேவையில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானம் இதுவாகும். பின்னர் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கடந்த போது, எந்த காலத்திலும் இல்லாத வகையில், மிக அதிகமான கண்காணிக்கப்பட்ட விமானம் ஆனது. தைவானின் தைபேயில் விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு, வரை 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement