பொருட்களின் விலை அதிகரிப்பினால் பொது மக்கள் எதிர்கொண்டுள்ள இன்னலை ஜனாதிபதியிடம் தான் சுட்டிக்காட்யிருப்பதாகவர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று (02) மேற்கொண் உத்தியோகபூர் விஜயத்தின் போது நுகர்வோர் மத்தியில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விஜயத்தின் போது அமைச்சர் இ கள்ளியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சத்தோச மொத்த விற்பனை நிலையத்தை பார்வையிட்டார்.
கள்ளியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சதோச மொத்த விற்பனை நிலையத்தை பார்வையிட்டதுடன், அதற்கு அருகாமையில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள சதோச விற்பனை நிலையத்தை பார்வையிட்டார்.
விற்பனை நிலயத்தில் காணப்படும் குறைபாடுகளை அதிகாரிகளிடமும்இ வாடிக்கையாளர்களிடமும் கேட்டறிந்துகொண்டதுடன், காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டார்.
இதன்போது பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் தமக்கு பால்மா இங்கு கிடைப்பதில்லையென கூறியதை தொடர்ந்து அமைச்சர் தொலைபேசி வாயிலாக உரிய அதிகாரியை தொடர்பு கொண்டு மாவட்டத்திற்கென இலவசமாக ஒரு தொகுதி பால்மாவை அனுப்பிவைக்குமாறு பணித்ததுடன், சத்தோசையின் விற்பனைக்காகவும் பால்மாவினை அனுப்பிவைக்குமாறும் பணித்தார்.
அத்தோடு கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது தான் ஜனாதிபதியிடம் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும், மக்கள் மிகுந்த கஸ்டத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள் என கூறியிருப்பதாகவும் இதன்போது பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்த மக்களிடம் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரின் கள விஜயத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் சத்தோச நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது கலந்துகொண்டனர்.