கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவனி (01) சிறப்பாக இடம்பெற்றது.
மாரசூரனை வதைத்து மாரியம்மன் எனப் பெயர் கொண்ட உலகமெல்லாம் இரட்சத்துவரும் அன்னை மாரியம்மன் அகல் விளக்கு எரியவைத்த காலத்துக்கு முந்திய காலமாக மட்டக்களப்பில் அருள்பாலித்துவருகின்ற அம்பாளின் ஆடிப்பூர பால்குட பவனி
ஆலய பிரதம குரு ஸ்ரீ நிஜோத் குருக்களின் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் ஆரம்பமாகி விசேட கும்ப பூஜைகள் நடைபெற்றது. மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஆலயத்தில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட அடியார்களின் பாற்குட பவனி மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியூடாக ஆலயத்தை வந்தடைந்தது.