மனைவியுடன் கள்ள உறவு: போலீஸ்காரர் மூக்கு அறுப்பு| Dinamalar

லாகூர்: பாகிஸ்தானில் தன் மனைவியுடன் கள்ள உறவு வைத்திருந்தவரின் காது, மூக்கு, உதடுகளை அறுத்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாக்.,கின் பஞ்சாப் மாகாணம் ஜங் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் காசிம் ஹயத்.இவரை, முகமது இப்திகர் என்பவர் கடத்திச் சென்று தனியிடத்தில் அடைத்து சித்ரவதை செய்துள்ளார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காசிமுக்கு, இப்திகர் மனைவியுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் எடுத்த படங்களை காட்டி அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இது பற்றி தெரியவந்ததும், இப்திகர் சமீபத்தில் காசிம் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

பொறுத்துப் பார்த்த இப்திகர், தன் நண்பர்களுடன் சேர்ந்து காசிமை கடத்தி, அவருடைய காது, மூக்கு, உதடுகளை வெட்டி சித்ரவதை செய்துள்ளார். போலீசார், காசிமை கண்டுபிடித்தபோது மிக மோசமான நிலையில் இருந்தார். தற்போது மருத்துவமனையில் உள்ள அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.