உங்கள் அலுவலகம் எப்படி? என உங்களிடம் கேட்டால் அதற்கு உங்களின் பதிவாக இருக்கும். நினைத்து பாருங்கள். ஒரு சிலர் அலுவலகமும் எங்களுக்கு இன்னொரு வீடு தான் என கூறுவார்கள். அது தான் எங்களை வாழவைக்கும் தெய்வம் என பல விதமாக கூறுவதை கேள்வி பட்டிருப்போம்.
ஆனால் சிட்னியை சேர்ந்த டிஜிட்டல் மீடியாவின் தலைமை செயல் அதிகாரி, தங்கள் நிறுவனத்தினை குடும்பம் என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இவர் அவ்வாறு கூறியது தற்போது சமூக வலைதளங்களில் ஒரு விவாதித்தை தூண்டியுள்ளது எனலாம்.
பாகிஸ்தான், ரஷ்யாவில் குறைந்து வரும் சீன முதலீடு.. டிராகன் தேசத்தில் என்ன தான் நடக்குது?
பெற்றோர்கள் பணி நீக்கம் செய்ய மாட்டார்கள்?
ஹஸ்ட்லர் (Hustlr) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேனியல் ஆபிரகாம், தனது லிங்க்ட் இன் பதிவில் உங்கள் அலுவலகத்தை குடும்பம் என்று கூறுவதை நிறுத்துங்கள். ஏனெனில் பெற்றோர் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மோசமான செயல்பாட்டினை காட்டினாலும், பணி நீக்கம் செய்ய மாட்டார்கள். செலவுகளை குறைக்க ஒரு போதும் பணி நீக்கம் செய்ய மாட்டார்கள் என கூறியுள்ளார்.
குழுவாக கவனம் செலுத்துங்கள்
நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில், ஒரு குழுவாக இருப்பதில் கவனம் செலுத்துள்ளது. அங்கு ஒவ்வொருவரும் மதிப்புள்ளவர்களாக உணர்கிறார்கள். உங்கள் நிறுவனம் உங்களது வர்த்தைகளால் வரையறுக்கப்படவில்லை. ஆனால் உங்கள் செயலால் என்றும் டேனியல் தெரிவித்துள்ளார்.
வேலை செய்யும் இடம் மட்டுமே
டேனியலின் இந்த பதிவினையை அடுத்து நெட்டிசன்கள் தங்களது எண்ணங்களை பகிர்ந்து வருகின்றனர். பயனர் ஒருவர் உங்கள் வேலை, வேலை செய்யும் இடம் மட்டுமே. கடின உழைப்பினை கொடுங்கள், சம்பளம் பெறுங்கள் என பதிவிட்டுள்ளார்.
நிறுவனத்தினை பணி நீக்கம் செய்யாதீர்கள்
இதே மற்றொரு பயனர், நீங்கள் செய்யும் வேலையை அடுத்து, உங்களை பார்த்துக் கொள்ளும் நிறுவனம் உங்களிடம் இல்லை என்பதற்காக, ஊழியர்களை நன்றாக நடத்தும் நிறுவனங்களை பணி நீக்கம் செய்யாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
குடும்பம் என்பது?
இதில் கவனிக்கதக்க பயனரின் பதிவு, குடும்பம் என்பது வெறும் ரத்த சொந்தம் மட்டும் அல்ல, எங்கள் குடும்பம் இல்லாதபோது நண்பர்கள் தான் நமக்காக நிற்கின்றனர். அப்படிப்பட்ட நண்பர்கள் உடன் பணிபுரியும் ஊழியராக இருக்கலாம். முதலாளியாக கூட இருக்கலாம். என் அம்மாவை விட என்னை நம்பிய ஒரு முதலாளி எனக்கு இருந்தார். நாங்கள் ஒரு குழுவாக இருக்கும்போது சிறப்பாக பணிபுரிந்த அனுபவம் உண்டு என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்..
உங்கள் அனுபவம் என்ன எங்களுடன் பகிருங்கள்..
Stop Calling Your Office Family: CEO’s Post Trending
Stop Calling Your Office Family: CEO’s Post Trending/முதலில் இதை நிறுத்துங்க.. கடுப்பான சிஇஓ-வின் டிரென்டிங் போஸ்ட்..!