வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
தீபாவளியன்று அதிகாலை. பைக்கிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்த அந்த ஆள் சத்தமிட்டார்,
‘ கடன் வாங்கினா வட்டி கட்ட மாட்டீங்களா?’
பரமசிவம் கெஞ்சினார்,
‘ மாப்பிள்ளை வந்திருக்காரு…சப்தம் போட வேண்டாம். நாளைக்குத் கொடுக்கிறேன்’
வட்டிக்காரனை வெளியே தள்ளிக் கொண்டு போனார் பரமசிவம். அடுத்த நாள் தெருவில் பரமசிவத்தைப் பார்த்த வட்டிக்காரன் கேட்டார்,
‘ நீங்கதான் கடனே வாங்கலயே? எதுக்கு என்னை வந்து வீட்டில் சத்தம் போடச் சொன்னீங்க?’
‘ நான் பணக்கஷ்டத்தில் இருக்கிறேன்னு தெரிஞ்சா மாப்பிள்ளை தீபாவளி, ஆடிக்கெல்லாம் அதிக செலவு வைக்க மாட்டார். அதற்குத்தான் இந்த டிராமா. நீ நல்லா நடிச்சே.. தேங்ஸ்.’
அடுத்த நாள் பரமசிவத்திடம் வந்து மகள் சொன்னாள்,
‘ அப்பா உங்க மாப்ள சொத்தையெல்லாம் என் பேருக்கு எழுதி வைக்கச் சொல்றாரு. விட்டா உங்க அப்பா வட்டி கட்டியே சொத்தெல்லாம் அழிச்சிடுவாருங்ராரு.’
******
–சின்னு சாமி சந்திரசேகரன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.