புவியைக் கண்காணிக்கும் ‘மைக்ரோசாட்-2ஏ’ செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி-D1 என்ற சிறியரக ராக்கெட் வரும் 7ஆம் தேதி காலை 9.18 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் இந்த ராக்கெட் சுமந்துச் செல்லும் 142 கிலோ எடையுள்ள செயற்கைகோள், கடலோர நிலப் பயன்பாடு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவும்.
இந்த செயற்கைகோளில் உள்ள 2 நவீன கேமராக்கள் மூலம் 6 மீட்டர் அளவுக்கு துல்லியமாகப் படம் பிடிக்க முடியும். இதனுடன் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் மூலம் 750 மாணவர்கள் உருவாக்கிய ஆஜாதிசாட் எனும் கல்விசார் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது.