வெள்ளைப்படுதல் நிறம்.. பின்னணியில் இருக்கும் மருத்துவ காரணங்கள் என்ன?

பெண்ணின் யோனியில் இருந்து வெளியேறும் திரவம், முற்றிலும் இயற்கையானது. பிறப்புறுப்பு, கருப்பையின் வாய் போன்ற இடங்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து வரக்கூடிய கசிவே இந்த வெள்ளைப்படுதல்.

உண்மையில், இது உறுப்பை சுத்தமாகவும், தொற்று இல்லாததாகவும் வைத்திருப்பதாக அறியப்படுகிறது. “உங்கள் பிறப்புறுப்பு திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கவும், உயவு அளிக்கவும், உங்கள் யோனியை சுத்தமாக வைத்திருக்கவும் வெள்ளைப்படுதல் உதவுகிறது” என்று ஆயுர்வேத நிபுணர் நித்திகா கோஹ்லி கூறினார்.

சாதாரண வெள்ளைப்படுதல் என்பது மெல்லிதாக ஒட்டக்கூடிய தன்மையுடனும் இருக்கும். எவ்விதத் துர்நாற்றமும் இருக்காது. இத்தகைய வெள்ளைப்படுதல் பற்றிப் பயப்பட தேவையில்லை.

இருப்பினும் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, பிறப்புறுப்பு வீங்குதல் போன்றவை இருந்தால் நீங்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். வெள்ளைப்படுதலுடன், இரத்த அறிகுறி இருந்தாலும் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

சிலவகையான கிருமி தொற்றுகளினாலும், கருப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். இரத்த சோகை, சர்க்கரை நோய் போன்ற காரணங்களினாலும் வெள்ளைப்படுதல் இருக்கலாம்.

குறிப்பாக பெண்களுக்கு தங்கள் வயது, மாதவிடாய் சுழற்சி அல்லது அடிப்படை சுகாதார நிலையைப் பொறுத்து பல்வேறு நிறங்களில் வெள்ளைப்படுதல் வரலாம்.

எனவே, உங்கள் வெள்ளைப்படுதல் இயல்பானதா அல்லது அதை சரிபார்க்க வேண்டுமா என்பது இங்கே.

தடித்த, வெள்ளை

வெள்ளைப்படுதல்’ தடித்த மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தால் சாதாரணமானது. இருப்பினும், அரிப்பு, எரியும் உணர்வு மற்றும் எரிச்சல் ஆகியவை, ஈஸ்ட் தொற்று ஏற்படுவதைக் குறிக்கலாம்.

மஞ்சள்

யோனியில் இருந்து வரும் திரவம்மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது “அசாதாரணமானது”. இது பாக்டீரியா தொற்றுக்கான அறிகுறியாக இருப்பதால், நிபுணரை அணுகவும்.

பழுப்பு

இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளால் ஏற்படலாம். “பிரவுன் டிஸ்சார்ஜ் தொடர்ந்து தோன்றினால், இது கருப்பை அல்லது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.”

பச்சை

வெள்ளைப்படுதல் பச்சை நிறத்தில் இருந்தால் அது சாதாரணமானது அல்ல, மேலும் “பாக்டீரியா தொற்று அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றின் அறிகுறியாகும்” என்று கோஹ்லி விளக்கினார்.

நிபுணர் மேலும் கூறுகையில், அரிப்பு, சிவத்தல், எரிச்சல் மற்றும் எரியும் உணர்வு ஆகியவற்றுடன் அடர்த்தியான, வெள்ளை, பாலாடைக்கட்டி போன்ற வெளியேற்றம் ஈஸ்ட் நோய்த்தொற்றின் அறிகுறிகள் ஆகும்.

உங்கள் வெள்ளைப்படுதல் அசாதாரண வாசனை அல்லது தோற்றம் கொண்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.