வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
செயின்ட் கிட்ஸ்: மூன்றாவது ‘டி-20’ போட்டியில் சூர்யகுமார் யாதவின் அதிரடி கைகொடுக்க, வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வென்றது. மூன்றாவது போட்டி செயின்ட் கிட்சில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மேயர்ஸ் அதிரடி தொடக்கம் தந்தார். மறுமுனையில் கிங்(20), பூரன்(22) ரோவன் பவல்(23), ஹெட்மயர்(20) அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தனர். அரைசதம் விளாசிய மேயர்ஸ்(73) புவனேஸ்வர் பந்தில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் புவனேஸ்வர் 2 விக்கெட் சாய்த்தார்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ்(76) கைகொடுத்தார். கேப்டன் ரோகித்(11) ரிடையர்ட் ஹட் முறையில் வெளியேறினார். ஷ்ரேயாஸ் ஐயர்(24), ஹர்திக் பாண்ட்யா(4) நிலைக்கவில்லை. ரிஷப் பண்ட்(33), தீபக் ஹூடா(10) பொறுப்பாக ஆட, 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement