மங்களூரு : ”தட்சிண கன்னடாவில் நடந்த மூன்று கொலை சம்பவத்தில் ஈடுபட்டோர், விரைவில் கைது செய்யப்படுவர். எந்த அமைப்பை சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என மாநில போலீஸ் டி.ஜி.பி., பிரவீன் சூட் தெரிவித்தார்.தட்சிண கன்னடாவில் பத்து நாட்களில் மூன்று வாலிபர்கள் கொலை செய்யப்பட்டதால், பதற்றம் நிலவி வருகிறது.
இது குறித்து, மாநில போலீஸ் டி.ஜி.பி., பிரவீன் சூட், மங்களூரில் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக ஆலோசித்தார். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம், அதிகாரிகளின் அலட்சியம், குற்றச்சம்பவங்களை தடுப்பது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தார்.பின், பிரவீன் சூட் கூறியதாவது:எந்த கொலை நடந்தாலும், இறந்தவர்கள் ஹிந்துவா, கிறித்துவரா, முஸ்லிமா என பார்க்க மாட்டோம். கொன்றவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதையும் பார்க்க மாட்டோம்.தட்சிண கன்னடாவில் நடந்த மூன்று கொலை சம்பவத்தில் ஈடுபட்டோர், விரைவில் கைது செய்யப்படுவர்.
எந்த அமைப்பை சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.அடையாளம் தெரிந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தெரிந்தும் தகவல் கொடுக்கவில்லை என்றால், குற்றத்திற்கு துணை போவதாக அர்த்தம்.கேரளா எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளோம். தட்சிண கன்னடாவில் போலீஸ் பலம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement