சென்னை ;தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு, இன்று அதிகன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, ‘ஆரஞ்ச்’ நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிவிப்பு:தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யும்.
13 செ.மீ.,
நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும். திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்துார், வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளை, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதிகன மழை பெய்யும்.
தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, திருப்பத்துார், வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
அதேபோல், வரும் 5, 6ம் தேதிகளிலும் பல மாவட்டங்களில் கன மழை தொடரும். நேற்று காலை நிலவரப்படி, கோவை சின்னக்கல்லார், வால்பாறை, 13 செ.மீ., மழை பெய்து
உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு தடை
லட்சத்தீவு, கேரள, கர்நாடக கடலோரம் மற்றும் அதையொட்டிய அரபிக் கடல், குமரிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக, ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகள் ஆகியவற்றில், இன்றும், நாளையும் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும்.
குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தமிழக, ஆந்திர பகுதிகள், கர்நாடக கடலோர அரபிக் கடல் பகுதிகளில், வரும் 5, 6ம் தேதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
எனவே, இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்