Jio 5G: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி; மலிவு விலையில் 5ஜி திட்டங்கள் கிடைக்குமாம்!

Jio 5G Spectrum Auction: நாட்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஏலத்தில் அதிக பணம் செலவழித்து அலைக்கற்றை ஒதுக்கியுள்ளது. இதனால் நாட்டிலேயே மலிவான 5ஜி சேவையை ஜியோ வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானியே தகவல் தெரிவித்துள்ளார். 5ஜி அலைக்கற்றை ஏலத்தில், ரிலையன்ஸ் ஜியோ சுமார் ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை வாங்கியுள்ளது.

பாதிக்கு மேல் ஜியோ வசம்

அதாவது, மொத்த ஏலத்தில் 58.65 விழுக்காட்டை ரிலையன்ஸ் ஜியோ பெற்றுள்ளது. சுருக்கமாக, 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் போது ரிலையன்ஸ் ஜியோ மட்டும் பாதிக்கு மேல் அலைவரிசைகளை தன் வசம் ஒதுக்கியுள்ளது.

மேலதிக செய்தி:
Legend iQOO 9T 5G: ஐக்யூ 9டி 5ஜி அறிமுகம்; ஃபிளாக்‌ஷிப் அம்சங்கள்… நியாயமான விலையில்!

ரிலையன்ஸ் ஜியோவைத் தவிர, பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களான பார்தி ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (VI), அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் (Adani Data Networks) ஆகியவை இணைந்து ரூ.62,095 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை வாங்கியுள்ளன.

5ஜி அலைக்கற்றை ஏலத்தின் மூலம் அரசுக்கு மொத்தம் ரூ.1,50,173 கோடி கிடைத்துள்ளது. மேலும், ரிலையன்ஸ் ஜியோ நாட்டில் உள்ள அனைத்து 22 வட்டங்களுக்கும் 700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளது. நுகர்வோருக்கு 5ஜி வாயிலாக சேவை வழங்க 700 MHz அலைக்கற்றை முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்தி:
Budget 5G Phones: ரூ.15,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்கள்!

பல போட்டிகள் இருந்தபோதிலும், ஜியோ ஏலத்தில் ஆதிக்கத்தை செலுத்தியது. அதிக விலை மதிப்புள்ள அலைக்கற்றைகளை தன் வசப்படுத்த எந்த தயக்கமும் இல்லாமல் ஏலம் கோரியது.

Xiaomi: சியோமி ஸ்மார்ட் கண்ணாடி; இனி ஸ்மார்ட்போன் வேலைகளை இது பார்த்துக்கொள்ளும்!

மலிவான 5ஜி சேவை

உலகத்தரம் வாய்ந்த மலிவான 5ஜி சேவையை நாட்டில் ஜியோ வழங்கும் என்று ஆகாஷ் அம்பானி கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ஜியோ 5ஜி இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியை தூண்டும் என்றும், கல்வி, சுகாதாரம், விவசாயம், டிஜிட்டல் இந்தியா போன்ற துறைகள் ஜியோ 5ஜி மூலம் பயனடையும் என்றார்.

புதிய தொழில்நுட்பத்தை ஏற்று உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாற வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நினைப்போம் என்று ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.

இந்த எண்ணத்துடன் தான் ஜியோ பிறந்தது. ஜியோவின் 4ஜி வெளியீட்டின் தாக்கமும் மிகப்பெரியது. இப்போது ஜியோ 5G தொழில்நுட்பத்தில் துறையை வழிநடத்த தயாராக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.