iQOO 9T 5G Features: நியாயமான விலையில் அதிக அம்சங்களை கொண்டிருக்கும் போனாக ஐக்யூ மொபைல்கள் திகழ்ந்துவருகிறது. இந்த சூழலில், நிறுவனம் கடந்த ஒரு சில வருடங்கள் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்கள் பயனர்களை அதிகமாகக் கவரவில்லை.
தன் இடத்தை மீட்டெடுக்க நிறுவனம் புதிய ஸ்மார்ட், பவர்ஃபுல் போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐக்யூ 9டி 5ஜி போன் பல சிறப்பம்சங்களுடன் வருகிறது. அனைத்து அம்சங்களும் பிளாக்ஷிப் தரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், போனில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், வி1+ கேமரா சிப், 120W பாஸ்ட் சார்ஜிங் போன்றவை அடங்கும். அந்த வகையில் போனின் முக்கிய அம்சங்கள், விலை, விற்பனை தினம், சலுகைகள் குறித்து பார்க்கலாம்.
Infinix: 8ஜிபி ரேம் உள்ள போன் விலை இவ்வளவு தானா! இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ அறிமுகம்
ஐக்யூ 9டி 5ஜி போன் விலை (iQOO 9T 5G Price)
லெஜெண்ட், ஆல்ஃபா ஆகிய இரு நிறத் தேர்வுகளில் போனை வாங்கலாம். இரு மாடல்களில் போன் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி மாடல் விலை ரூ.49,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முறையே 12ஜிபி + 256ஜிபி வகை ரூ.54,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா ஷாப்பிங் தளத்தின் வாயிலாக இந்த போன் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு கொடுவரப்படுகிறது. அறிமுக தின சலுகைகளும் இந்த போனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்தி:
5G Auction: ஏர்டெல்லுக்கு இன்னும் தேவை… விடாமல் பிடிக்கும் ஜியோ!
நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரில், போனின் அடிப்படை மாடல் விலை ரூ.54,999 என்றும், இதன் சலுகை விலை ரூ.49,999 எனவும், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடியை சேர்த்து போனை ரூ.45,999 என்ற விலைக்கு வாங்க முடியும் என்று கூறியுள்ளது.
ஐக்யூ 9டி 5ஜி போன் அம்சங்கள் (iQOO 9T 5G Specifications)
புதிய iQOO ஸ்மார்ட்போனில் 6.78 அங்குல இ5 அமோலெட் சாம்சங் டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் இருக்கிறது. இதன் பீக் பிரைட்னஸ் 1500 நிட்ஸ் ஆகவும், இதற்கு HDR10+ மதிப்பீடும் உள்ளது கூடுதல் சிறப்பாகும். போன் டிஸ்ப்ளேயின் டச் சேம்பிளிங் ரேட் 360Hz ஆகும்.
போனை இயக்க திறன்வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 8+ Gen 1) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பழைய 8 ஜென் 1 புராசஸரை விட 10 விழுக்காடு அதிக திறன்மிக்கதாக இருக்கும்.
Xiaomi: சியோமி ஸ்மார்ட் கண்ணாடி; இனி ஸ்மார்ட்போன் வேலைகளை இது பார்த்துக்கொள்ளும்!
ஐக்யூ 9டி 5ஜி போன் கேமரா (iQOO 9T 5G Camera)
இதில் 12ஜிபி வரை LPDDR5 ரேம் மெமரியும், 256ஜிபி வரை UFS 3.1 ஸ்டோரேஜ் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. வெளிச்சம் குறைந்த இடத்தில் சிறந்த புகைப்படங்களை எடுக்க ஏதுவாக, V1+ இமேஜ் புராசஸிங் சிப்செட்டும் இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் சிறப்பு.
கேமராவைப் பொருத்தவரை, 50 மெகாபிக்சல் GN5 முதன்மை சென்சார், 13 மெகாபிக்சல் வைட் ஆங்கிள், 12 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் ஆகியவை அடங்கிய மூன்று சென்சார்கள் கொண்ட அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
ஐக்யூ 9டி 5ஜி ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4,700mAh பேட்டரியும், இதனை ஊக்குவிக்க 120W பிளாஷ் சார்ஜ் ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிவிரைவான சார்ஜிங் அம்சத்தின் உதவியுடன் மொபைலை 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடலாம் என iQOO நிறுவனம் உறுதியளித்துள்ளது.