சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. அதிமுக பொதுக்குழுவை எதிர்க்கும் வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது. ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்தவர் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி. வழக்குக்கு தொடர்பில்லாத கருத்துகளை கூறியதாக நீதிபதி மீது ஓபிஎஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.