ஆவின் பால் பாக்கெட்டில் விளம்பரம் – ஆவின் குடிநீர் விற்பனை! அமைச்சர் நாசர் தகவல்

சென்னை: ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என்றும், பால்பாக்கெட்டில் விளம்பரம் செய்ய அமைச்சர் நாசர் தெரிவித்து உள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அம்மா குடிநீர் என்ற பெயரில் பாட்டலில் குறைந்த விலையில் தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்த திமுக ஆட்சி அதை நிறுத்தியது. இந்த நிலையில்,  தற்போது,ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

ஆவின் பாலில் எடை குறைவு ஏற்பட்டது சர்ச்சையான நிலையில், அது ஒரே ஒரு பாக்கெட்டில் மட்டும்தான் குறைந்தது என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்தது. இந்த நிலையில்,  ஆவினுக்கு சொந்தமான 28 auro water plant மூலம் தண்ணீர் பாட்டில் தயாரிக்க உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்து உள்ளார். ஆவின் மூலம், அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை தயாரித்து விற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றவர், ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா படங்களின் விளம்பரங்களையும் வெளியிட பரிசீலினை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.