வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 என வருமான வரித்துறை அலுவலகம் அறிவித்திருந்த நிலையில் ஜூலை 31-ஆம் தேதி பெரும்பாலான வருமான வரி செலுத்துபவர்கள் தங்களது வருமானத்தை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இன்னும் ஒரு சிலர் அபராதத்துடன் தற்போது வருமான வரியை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை வருமான வரி தாக்கல் செய்தவர்களின் வருமானத்தின்படி, இந்தியாவில் ஒரு கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ITR 2022: வருமான வரி தாக்கலுக்கு அவசியம் இந்த 10 ஆவணங்கள் தேவை.. !
இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை
2021 – 22 நிதி ஆண்டில் வருமானவரி தாக்கல் செய்தவர்களின் பட்டியலின்படி இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1.31 லட்சம் என தெரிய வந்துள்ளது. 1.31 லட்சம் பேர் இந்த ஆண்டில் ஒரு கோடிக்கும் மேல் பெற்றுள்ளதாக தங்களுடைய வருமான வரி தாக்கல் படிவத்தில் தெரிவித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
6 லட்சம் புதிய கோடீஸ்வரர்கள்
அதேபோல் ஒரு கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1.25 லட்சம் பேர்கள் மட்டுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து சுமார் 6 லட்சம் பேர் இந்த ஆண்டு ஒருகோடி வருமானம் பெற்றவர்கள் கிளப்பில் இணைந்துள்ளனர்.
ரூ.10 லட்சம் – ரு.1 கோடி வருமானம்
மேலும் மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த தகவலின்படி 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் பெற்ற தனி நபர்களின் எண்ணிக்கை 73 லட்சமாக இருந்தது. ஆனால் 2021-21ஆம் நிதியாண்டில் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் பெற்ற தனி நபர்களின் எண்ணிக்கை 77 லட்சமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த 77 லட்சத்தில் பெரும்பாலானோர் அடுத்த ஆண்டு ஒரு கோடி கிளப்பில் இணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளைஞர்களின் ஸ்டார்ட்அப்
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தொழில் முனைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கி அந்த நிறுவனத்தை ஒரு சில ஆண்டுகளில் லாபகரமாக கொண்டு வருவதால் அவர்களுடைய ஆண்டு வருமானம் ஒரு கோடியை எட்டி வருவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்திய இளைஞர்கள்
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகரிக்க அதிகரிக்க கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நிறுவனங்களில் வேலை செய்யும் ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் குறைந்து வருவதாகவும், சொந்த தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுவது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்றுவதில் இளைஞர்களின் பங்கு மிக அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்திய பொருளாதாரம்
இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இளைஞர்கள் முக்கிய காரணமாக இருக்கும் நிலையில் இதே நிலை நீடித்தால் இந்தியாவின் பொருளாதாரம் மேம்படும் என்றும் இந்தியா அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி அடையும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
FY 2021-22, with 1.31 lakh people total income above Rs.1 crore!
FY 2021-22, with 1.31 lakh people total income above Rs.1 crore! | இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இத்தனை லட்சமா? ஐடிஆர் தாக்கலில் ஆச்சரிய தகவல்கள்