மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஈரோடு பவானி அருகே வெள்ள நீர் குடியிருக்கும் பகுதிகளில் புகுந்துள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே காவிரி கரையோற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால், பவானி காவிரி கரையோர பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அவர்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதியில் வசித்த பொது மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.